பேரழிவை ஏற்படுத்தும் அணுசக்தி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
புதுதில்லி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், இந்தி யாவின் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிப்பதற்கும், விபத்துக ளுக்கான பொறுப்பு விதிகளில் தனி யாருக்கு சாதகமாக திருத்தம் கொண்டு வருவதற்குமான “நிலையான பயன் பாடு மற்றும் இந்தியாவை மாற்றுவ தற்கான அணுசக்தி மேம்பாடு (ஷாந்தி - SHANTI) மசோதா, 2025” குரல் வாக்கெடுப்பு மூலம் டிசம்பர் 17 புதனன்று இரவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க் கட்சிகளும், சிஐடியு தொழிற்சங்க மும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தனியார் மயம் மற்றும் அதானி குறித்த கேள்வி ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்த இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, “அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கவே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. அதானி குழுமம் இத்துறையில் ஆர்வம் காட்டிய நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவது தற்செயலானதா?” என கேள்வி எழுப்பி னார். இதற்கு பதிலளித்த அமைச்சர், குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் மசோதா விற்கும் தொடர்பில்லை என மறுத்தார். வெளிநாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் முயற்சி? 2010-ஆம் ஆண்டின் அணுசக்திப் பொறுப்புச் சட்டத்தின்படி, விபத்து ஏற்பட்டால் உபகரணங்களை வழங்கிய விநியோகஸ்தர்களிடம் (Suppliers) நஷ்டஈடு கோரும் உரிமை ஆப்ரேட்டர்களுக்கு இருந் தது. ஆனால், புதிய மசோதாவில் இந்த விதி நீக்கப்பட்டுள்ளது.இது வெளிநாட்டு நிறுவனங்களை விபத்து பொறுப்பிலிருந்து விடு விக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்கு பதிலளித்த அமைச்சர், “சிறிய மாடுலர் உலை கள் (SMRs) போன்ற புதிய தொழில் நுட்பங்களில் விபத்து அபாயம் குறைவு என்பதால் முதலீடுகளை ஈர்க்க இந்த மாற்றம் அவசியம்” என்றார். இழப்பீடு குறித்த சர்ச்சை மசோதாவில் அதிகபட்ச இழப்பீடு வரம்பாக ₹3,000 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டிய சசி தரூர் மற்றும் சுப்ரியா சுலே, “புகுஷிமா மற்றும் செர் னோபில் போன்ற அணு உலை விபத்துகளின் பாதிப்பு பல லட்சம் கோடிகளைத் தாண்டிய நிலையில், வெறும் 3,000 கோடி ரூபாய் எப்படி போதுமானதாக இருக்கும்?” எனக் கேள்வி எழுப்பினர்.