states

img

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க 163 தடை உத்தரவை அமல்படுத்த முடியாது தில்லி பல்கலை. நிர்வாகம், காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க 163 தடை உத்தரவை அமல்படுத்த முடியாது தில்லி பல்கலை. நிர்வாகம், காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி பல்கலைக்கழக மானியக் குழு  (யுஜிசி) உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளைக் களைந்து, அனைத்து மாண வர்களுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக ‘சமத்துவ ஒழுங்குமுறைகள் 2026’ என்ற புதிய விதியை கொண்டு வந்தது.  இந்த விதிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும்  போராட்ட ங்கள் நடைபெற்றன. குறிப்பாக தில்லி பல் கலைக்கழத்தில் பிப்., 13ஆம் தேதி அன்று மாண வர்கள் நடத்திய போராட்டத்தில், ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்கள் மற்றும் தில்லி காவல்துறையினர் வன்முறைக் களமாக மாற்றி அடாவடியில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல்  ஏற்பட்டது. இதனையடுத்து, தில்லி பல்கலைக் கழக வளாகத்தில் 2 மாத காலத்திற்கு ஆர்ப்பா ட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. தில்லி பல்கலைக்கழக நிர்வாகம் அமல் படுத்திய இந்த தடையை நிறுத்தி வைக்கக் கோரி மாணவர் தரப்பில் இருந்து தில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வியாழனன்று உயர்நீதிமன்ற தலை மை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்கள் என இரு தரப்பு வாதத்திற்குப் பின்பு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு,”இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது?  இதற்கான தேவை என்ன? சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது காவல்துறையின் கடமை என்றா லும், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163 (முன்னர் CrPC 144) விதியைப் பயன் படுத்துவதற்கு சில முன்நிபந்தனைகள் உள்ளன. எனவே தில்லி பல்கலைக்கழகத்தில் முழுமையான தடையை விதிக்க முடியாது என்பது எங்களது தெளிவான கருத்து. அமைதி யான போராட்டங்கள், பேரணிகள் என அனை த்தையும் இந்தத் தடை உள்ளடக்கியுள்ளது. இதை நீங்கள் எப்படி நியாயப்படுத்துவீர்கள்?” என கேள்வி எழுப்பி, மார்ச் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தில்லி காவல்துறை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.