states

திருச்சி முக்கிய செய்திகள்

தெலுங்கானாவில் 25 நடிகர்கள் மீது கிரிமினல் வழக்கு

சூதாட்டச் செயலி விளம்பரம்  

சூதாட்டச் செயலிகளை ஊக்கு விக்கும் விதமாக சமூக வலை தளங்களில் நடிகர்களின் விளம்பரங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதற்கு எதிராக  சமூக வலைதளங்களில் நெட்டி சன்கள் சார்பில் பல்வேறு புகார்கள் (ரிப்போர்ட்) அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சூதாட்டச் செயலி விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு எதிராக பணீந்திர சர்மா என்ற தொழி லதிபர் ஹைதராபாத் காவல்நிலையத் தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “பணம் பெற்றுக் கொண்டு சூதாட்டச் செயலி விளம்பரத்தில் நடித்து மக்களை தவறாக நடிகர்கள் வழி நடத்துகின்றனர். சூதாட்டச் செயலிகளில், பலர் கடின மாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை இழந்துவிட்டனர்” என அதில் கூறப் பட்டுள்ளது. இதனையடுத்து சூதாட்டச் செய லியின் விளம்பரங்களில் நடித்த முன்னணி நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா  டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி , பிர னீதா, சிரி ஹனுமந்து, நிதி அகர்வால், அனன்யா நாகல்லா, ஸ்ரீமுகி, வர்ஷினி சௌந்தரராஜன், வசந்தி கிருஷ்ணன், ஷோபா ஷெட்டி, அம்ருதா சவுத்ரி, நயனி பவானி, நேஹா பதான், பாண்டு, பத்மா வதி, ஷா ப்ரினி, பத்மாவதி,  விஷ்ணு  உள்ளிட்ட 25 நடிகர்கள் மீது ஹைதராபாத் காவல்துறை கிரிமினல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

சத்தீஸ்கரில் நக்சல்கள் என 22 பேர் சுட்டுக்கொலை

பாஜக ஆளும் சத்தீஸ்கரில்பிஜாப் பூர் மாவட்டத்தில் வியாழ னன்று காலை 7 மணியள வில் பிஜாப்பூர் - தண்டேவாடா மாவட்டங் களின் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் சத்தீஸ்கர் காவல் துறையினர் இணைந்து நிகழ்த்திய என்கவுண்டரில் 18 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நக்சல்களின் பதில் தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் படை காவலர் ஒருவர் வீர மரணமடைந்ததாக வும், சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கிக ள், வெடிபொருள்களுடன் 18 நக்சல்க ளின் உடல்கள் மீட்கப்பட்டதாக சத்தீஸ்கர் மாநில மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.  இதே போல கான்கர் மாவட்டத்தில் 4 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த 2 என்கவுண் டர்கள் மூலம் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் நக்சல்கள் என 22 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.