முகமது அக்லாக் வழக்கு நீதிமன்ற உத்தரவுக்கு சிபிஎம் வரவேற்பு
லக்னோ 2015ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி யில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்தி ருந்ததாகக் கூறி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முகமது அக்லாக் என்பவ ரை இந்துத்துவா குண்டர்கள் கொ டூரமாக அடித்துக் கொன்றனர். அக்லாக் கும்பல் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்க ளைப் பாதுகாக்க முயன்ற பாஜக தலைமையிலான உத்தரப் பிரதேச அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கௌதம் புத்த நகர் மாவட்ட நீதிமன்றம் நிரா கரித்தது, நீதிக்குக் கிடைத்த வெற்றி யும் மதவெறி அரசியலுக்குக் கிடைத்த தோல்வியும் ஆகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி, மாவட்ட அமர்வு நீதிபதியின் உத்தரவை வரவேற்றுள்ளது. இந்த முக்கிய விசாரணையின் போது, கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார். அரசிய லமைப்பு விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை அடிப்படை யாகக் கொண்ட இந்த உத்தரவு, குண்டர் கும்பல் படுகொலை போன்ற கொடூரமான குற்றங்க ளைச் செய்பவர்களைப் பாது காக்கும் பாஜக அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக ஒரு வலு வான செய்தியை அனுப்புகிறது என்று அவர் கூறினார். இந்தத் தீர்ப்பு நாட்டில் நீதித் துறையின் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலை நிறுத்துவதற்கான ஒரு முக்கிய மான நடவடிக்கை என்றும், கும்பல் படுகொலை மற்றும் மதவெறி வன்முறைக்கு எதிராகப் போராடும் அனைத்து சக்திகளுக்கும் இது ஒரு நம்பிக்கையின் செய்தியாக அமைகிறது என்றும் பிருந்தா காரத் கூறினார். (ந.நி.)
