states

img

கைரளி சமாஜ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கணேசனுக்கு சிபிஎம் வாழ்த்து!

கைரளி சமாஜ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கணேசனுக்கு சிபிஎம் வாழ்த்து!

கிருஷ்ணகிரி, டிச.24 - ஓசூர் சுற்றுப்புறங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த மக்களின் பொதுவான அமைப்பான கைரளி சமாஜம் ஓசூர் மாநகரில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது.10 நாட்களுக்கு முன்பு இதன் தேர்தல் நடைபெற்றது.  அதில் ஓசூர் மாடர்ன் பர்னிச்சர் உரிமையாளர்,மார்க்சிஸ்ட் கட்சி முன்னணி ஊழியர் கணேசன் நான்காவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கைரளி சமாஜத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாடன் பர்னிச்சர் கணேசனை மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட குழு சார்பில் மாநில குழு உறுப்பினர் பத்ரி,மாவட்டச் செயலாளர் சுரேஷ் மாநகர செயலாளர் நாகேஷ்பாபு மூத்த தோழர் சேதுமாதவன், ஆகியோர் வாழ்த்தினர். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கணேசன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பி னராகவும் கட்சியின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார்.  ஏற்கெனவே 3 முறை தலைவராக செயல்பட்டுள்ள கணேசன் கடந்த காலங்களில் கைரளி சமாஜத்திற்காக உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு பொது நிகழ்ச்சிகளுக்கு பயன்படும் வகையில் மண்டபம் கட்டுவதற்காக இரு இடங்கள் வாங்கப்பட்டுள்ளதற்கு பெரும் முயற்சி எடுத்துள்ளதாகவும், கைரளி சமாஜத்தினருக்கு மட்டுமல்ல,ஏழை மாணவர்களின் கல்வி,மருத்துவத்திற்கு தொடர்ந்து உதவி வருவதாகவும் இந்த உதவிகள் தொடரும் எனவும் கூறினார். அக்டோபர் 12,13,14 ஆகிய தேதிகளில் ஓசூரில் வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு நடந்த போது கைரளி சமாஜத்தின் முன்னாள் தலைவராக இருந்த கணேசன் கைரளி சமாஜ் மக்களிடம் 3 லட்சம் வரை நிதி வசூலித்து வாலிபர் சங்க மாநில மாநாட்டிற்குஉதவியுடன், வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் ஏஏ ரஹீம்,வாலிபர் சங்க அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜெய்சிக் தாமஸ் ஆகியோருடன் மூன்று நாட்களும் இருந்து மாநாட்டுப் பணிகளில் முழுமையாக பங்கேற்றார். மேலும் வாலிபர் சங்க அகில இந்திய தலைவரும் எம்பியுமான ஏ.ஏ.ரஹீ மிடம் ஓசூர் கேரள மக்கள் சார்பில் திரு வனந்தபுரம் ஓசூர் கேரள போக்கு வரத்து பேருந்து விடுவதற்கு மனு கொடுத்ததோடு,அந்த பேருந்து விடு வதற்கும் தொடர்ந்து எம்பி ஏ.ஏ. ரஹீமிடம் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.அதனடிப்படையில் தற்போது கேரள பேருந்து ஓசூரிருந்து திருவனந்தபுரம் விடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து விடு வதற்கும் கணேசன் தொடர் முயற்சிகளை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.