தாக்கரே சகோதரர்கள் இணைந்து போட்டி
மும்பை தேர்தலில் தங்களது கட்சி கள் இணைந்து போட்டியிடும் என்று உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்கள் அதிகாரப்பூர்வ மாக அறிவித்துள்ளனர். மும்பை மாநகராட்சி (BMC) தேர்தல் வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிவசேனா (UBT) தலை வர் உத்தவ் தாக்கரே மற்றும் மகா ராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போ வதாக புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி அமைந்துள்ளது. மும்பை மற்றும் நாசிக் தவிர, மாநி லத்தின் பிற 27 மாநகராட்சிகளிலும் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படு கிறது.
