states

img

மணிப்பூரை தொடர்ந்து அசாமிலும் வன்முறை வெடிப்பு

மணிப்பூரை தொடர்ந்து  அசாமிலும் வன்முறை வெடிப்பு

திஸ்பூர் அசாம் மாநிலத்தின் கர்பி பழங்குடியின மக்களுக்கும், அங்கு பல ஆண்டுகளாக மேய்ச்சல் நிலங்களில் குடியேறி வசித்து வரும் பழங்குடியினர் அல்லாத மக்க ளுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.   அரசுக்குச் சொந்தமான ‘கிராம மேய்ச்சல் நிலங்கள்’ (VGR) மற்றும் ‘தொழில்முறை மேய்ச்சல் நிலங்களில்’ (PGR) பழங்குடியினர் அல்லாத பலர் சட்டவிரோதமாகக் குடியேறி யுள்ளதாகக் கர்பி பழங்குடியின அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. அந்த நிலங்களில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 9 பேர் திங்கட்கிழமை அதிகாலையில் காவல் துறை யினரால் அழைத்து செல்லப்பட்ட நிலையில் திடீர் வன்முறை வெடித்தது. வன்முறை வெடித்த பிறகே அவர்களை கைது செய்ய வில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் என காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் அதற்குள் நிலைமை கைமீறி பெரும் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் கர்பி ஆங்லாங் தன்னாட்சி மன்றத்தின் தலை மைச் செயல் உறுப்பினர் துளிராம் ரோங் ஹாங்கின் வீட்டிற்கும், கெரோனி சந்தையில் உள்ள பீகார் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சுமார் 15 கடைகளுக்கும் தீ வைத்தனர். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.   துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சிங்தி திமுங் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.   தீவைக்கப்பட்ட  கடைக்குள்ளே உள்ளே  சிக்கிக்கொண்ட சுரஜ் தே என்ற 25 வயது மாற்றுத்திறனாளி ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காவலர்கள் பொதுமக்கள் என 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது அப்பகுதியில் என்ன நடக்கிறது என்ற உண்மையை  பிறர் தெரிந்து கொள்ளா மல் தடுக்கும் வகையில் இணையச் சேவை களை பாஜக அரசு முடக்கியுள்ளது.  வன்முறையைத் தொடர்ந்து அசாம் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ரனோஜ் பெகுவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை காலை தங்கள் உண்ணாவிரதப் போராட் டத்தைக் கைவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதிமொழியைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாகக் கூறப்படுகிறது.  கர்பி போராட்ட அமைப்புகள், அசாம் அர சாங்கம், கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் ஆகியவற்றுக்கு இடையே முதல் சுற்று பேச்சு வார்த்தை டிசம்பர் 26 அன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது வன்முறை வெடித்த பகுதி களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப் பட்டுள்ளது. டிசம்பர் 24 முதல் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.  பாஜகவின் இனவெறி  வெறுப்பு பிரச்சார அரசியல் மணிப்பூரை தொடர்ந்து தற்போது அசாமில் கலவரத்தை  உருவாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கத் துவங்கி யுள்ளது என கடும் விமர்சனங்கள் எழுந்துள் ளன.