கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்ட மாநாடு ஜனவரி 29 முதல் 31 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 47 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிய மாவட்டச் செயலாளராக எம்.மெகபூப் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் பிரதிநிதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாடு தொடக்கவிழாவிற்கு முன்பு நடைபெற்ற மாபெரும் பேரணியில் 10,000 செந்தொண்டர்கள் உட்பட 50,000 பேர் கலந்து கொண்டனர்.