states

img

ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

ஆறுதல்

ம் ஆத்மிக் கட்சித் தலை வர் அரவிந்த் கெஜ்ரிவா லுக்கு நீதிமன்றம் ஆறுதல் தந்திருக்கிறது. 2024ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, மக்களவைத் தேர்தலை சந்திப்பதில் அவர் முனைப்பாக இருந்தார். அவரை முடக்குவதற்காக அவர் மீது  வழக்குப் பதிந்ததோடு, தொடர்ந்து விசாரணைகளுக்கான அழைப்பு களை அனுப்பிக் கொண்டேயிருந்த னர். தேர்தல்கள், மாநில முதலமைச் சர் உள்ளிட்ட பணிகளைச் சுட்டிக் காட்டி அந்த அழைப்புகளை ஏற்க முடி யாத நிலையில் இருந்தார். அவற்றிற் கான பதில்களையும் அனுப்பினார். அதேவேளையில், இந்த அழைப்பு கள் இவருக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே, ஊடகங்களுக்கு கசியவிடப் பட்டதையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி யிருக்கிறார்கள். இதையெல்லாம் கணக்கில் கொண்ட நீதிமன்றம்,  அழைப்புகளை ஏற்காததால் அவர் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த கிரி மினல் வழக்குகளை ரத்து செய்திருக் கிறது.  

முனைப்பு

திரிபுரா பழங்குடிப் பகுதி சுயாட்சி  மாவட்டக் கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக-திப்ரா மோதா கூட்டணிக்குள் அடி தடி நடக்கும் வேளையில், அனைத்து  28 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதென்பது வெற்றி, தோல்வி சார்ந்தது மட்டுமல்ல, அடித்தள மக்களோடு மீண்டும், மீண்டும் தொடர்புபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகவே கட்சி பார்க்கிறது என்று பிரதான எதிர்க்கட்சித் தலைவரான ஜிதேந்திர சவுத்ரி கூறியுள்ளார். வாக்களிக்காவிட்டால், கவுன்சிலுக்கு நிதி வராது என்று பாஜகவினர் மிரட்டி வாக்குகளைப் பெற முயற்சிக்கின்ற னர். தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி, கூட்டணிக் கட்சியையே காலி செய்யும் முயற்சியைத் தடுக்க முடியா மல் திப்ரா மோதா கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கிறது.

யோசனை

குஜராத்தில் ஒடியா மொழி வழிக் கல்வி தரும் பள்ளிக் கூடங்கள் வேண்டும் என்று  அம்மாநில முதலமைச்சர் படேலுக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள் ளார். அம்மாநிலத்தின் சூரத் நகரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக வசிக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் பிரதான் இந்தக் கோரிக்கையை வைத்திருக் கிறார். மொழி விவகாரங்களில் ஒன்றிய அரசின் பேச்சைக் கேட்கா விட்டால், நிதி தர மாட்டோம் என்று  தமிழ்நாடு, கேரளா போன்ற மாநி லங்களை மிரட்டுவது போல, குஜ ராத்தையும் பிரதான் மிரட்டுவாரா அல்லது மிரட்டினால் தனது பதவி  போய்விடும் என்று ஒதுங்கிக் கொள் வாரா என்று சமூக வலைத்தளங்  களில் கேள்விகள் எழுப்பப்படு கின்றன. வழக்கம்போல பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களுக்கு மட்டும் எழுதுறதோட நின்றிருக்க லாமோ என்று யோசிக்குராறாம் பிரதான்.

ஆதரவு

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நினைவு திரிணாமுல் காங்கிரசுக்கு வந்துவிட்டது. கடந்த ஐந்து ஆண்டு களில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தபோதும், சிஐடியு மூலமாகவே தொழிலாளர்கள் போராட முடிந்தது. திரிணாமுல் அரசும், அதன் தொழிற்  சங்கமும் பாராமுகமாகவே இருந்தன. ஒன்றிய அரசால் அதைச் செய்ய முடியும், இதைச் செய்ய முடியும் என்று கடந்த இரண்டு தேர்தல்களாக வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பாஜகவும் கண்டுகொள்ள வில்லை. கடந்த ஆறு மாதங்களாக சிபிஎம் சார்பான மக்கள் சந்திப்பு இயக்கம் மலைத் தோட்டங்களில் நடத்தப்பட்டது. இதற்குக் கிடைத்த ஆதரவால் கலங்கிப் போயுள்ள திரிணாமுல் சந்திப்பு இயக்கத்தை நடத்தத் தொடங்கியுள்ளது. பாஜகவும்  திட்டமிட்டிருக்கிறது.