சண்டிகர் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிக நெருக்கமானவர். இவரது தலை மையில் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, உயர்கல்வித்துறை அதி காரிகள் கூட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்த கூட்டத் தில் பேசிய நயாப் சிங் சைனி, “தேசிய கல்விக் கொள்கையின்படி அனைத்துப் பள்ளிகளிலும் தர மான கல்வி வழங்கப்படுவதை அதி காரிகள் உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்றாற் போல மாணவர்க ளுக்கு ஒழுக்கம், தர்க்கநெறிகள் குறித்த சிந்தனையை வளர்க்கும் வகையில் 8ஆம் வகுப்பு வரை யிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும். இந்த நடைமுறைக்கு அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும்” என கூறியுள்ளார். ஹரியானா முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிகள்? ஹரியானா அரசு மாநிலம் முழுவதும் ஆங்கில கல்விக்குப் போட்டிக்கு மாதிரி சமஸ்கிருதப் பள்ளிகளை அதிக எண்ணிக்கை யில் நிறுவியுள்ளது. அவை தற்போது சிபிஎஸ்இ கல்வியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இத்த கைய சூழலில்,”சமஸ்கிருதப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் கான தேவை மற்றும் போட்டி அதி கரித்து வருவதால், சமஸ்கிருதப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என்றும் நயாப் சிங் அந்த கூட்டத்தில் கூறி யுள்ளார். 8ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதை அறிவிப்பு மற்றும் சமஸ்கிருதப் பள்ளிகளின் எண்ணிக்கை அதி கரிக்கும் உத்தரவுக்கு ஹரியானா மாநிலம் முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.