ஸ்கேன் இந்தியா
கூட்டுக் கொள்ளை
மேற்கு வங்கத்தில் நிலக்கரிக் கடத்தல் காரர்களுக்கும், ரியல் எஸ்டேட்கா ரர்களுக்கும் இடையிலான தொடர்பு அம்பலமாகியிருக்கிறது. அசன்சால், துர்க்காபூர் ஆகிய பகுதிகளில் நிலக்கரிக் கடத்தல் கும்பல்கள் பல உள்ளன. பாஜக மற்றும் திரிணாமுல் ஆகிய கட்சிகளுடன் இந்தக் கும்பல்களுக்குத் தொடர்பு உண்டு. இந்தக் கும்பல்கள், ரியல் எஸ்டேட்கா ரர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, உள்ளூர் காவல்துறையினரும் இந்தக் கும்பலில் இணைந்திருக்கிறார்கள். 2023 முதல் 2025 வரையில் அந்தப் பகுதியில் பணியாற்றி வந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டுள் ளனர். ரியல் எஸ்டேட்காரர்கள் சின்மோய், கிரண் கான் ஆகிய இருவரின் வங்கிக்கணக்கில் கணக்கில் காட்டாத வருமானமாக ரூ.150 கோடி இருந்தி ருக்கிறது. இது தற்போது முடக்கப்பட்டுள்ளது.
தடுமாற்றம்
மக்களவையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்வி களுக்கு பதில் சொல்ல முடியாமல் பிரத மர் பதுங்கியது கடந்தவாரச் செய்தியாகும். கூட்ட ணிக்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் தலைவர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் வார்த்தைகளை உதிர்ப்பது இந்த வாரச் செய்தியாக உள்ளது. மேலவையில் ராஷ்டிர ஜனதாதள உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி, அரசின் செயல்பா டுகளை விமர்சித்துப் பேசினார். அவருடைய விமர்ச னங்களுக்கு பதில் தராமல், அவரை “இந்தப் பொண்ணு” என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஏற்கெனவே, பேசுகையில் நிதிஷ் குமார் தட்டுத் தடுமாறுகிறார் என்ற கருத்து பரவலாக உள்ளது. தற்போது தேவையற்ற வார்த்தைகளைப் பயன் படுத்துகிறார் என்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி யைத் தோற்றுவித்துள்ளது.
சதியா..?
அஜித் பவாரின் மரணம் சதியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்கிறார் ரோகித் பவார். சரத் பவார் குடும்பத்தைச் சேர்ந்த இவர் தற்போது மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பி னராக உள்ளார். சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், இரு பிரிவுகளின் இணைப்புக்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். மரணம் பற்றி இவர் தற்போது தெரிவித்துள்ள கருத்துகளில், அவர் பறந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி, பல முறை குடித்து விட்டு வந்ததற்கா கத் தண்டிக்கப்பட்டவர் என்று கூறியிருப்பது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானி அன்றைய தினம் குடித்து விட்டு ஓட்டினாரா அல்லது அவரை வேண்டுமென்றே அமர்த்தினார்களா என்பனவெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே அவருடைய கோணமாக இருக்கிறது.
தலைநகர் அவலம்
தனிநபர் வருமான சராசரியில் இந்தியாவிலேயே அதிகமாக உள்ள மாநிலங்களில் தில்லியும் ஒன்றாகும். ஒரு ஆண்டுக்கு சராசரியாக 4 லட்சத்து 61 ஆயிரத்து 910 ரூபாய் என்று அதிகாரப்பூர்வக் கணக்கு சொல்கிறது. 2011-22இல் இருந்து 2023-24 வரையிலான காலகட்டத்தில் 20 விழுக்காடு உயர்வு இருந்துள்ளது. அதேவேளையில், வருமானத்தை இழந்தவர்களின் எண்ணிக் கையும் அதிகரித்திருக்கிறது. மாதம் 10 ஆயி ரத்துக்குக் குறைவான வருமானம் உள்ள குடும்பத் தில் உள்ள பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக் காக மாநில அரசு உதவித்தொகை தருகிறது. கடந்த ஆண்டு வரையில் இதை 30 ஆயிரம் குடும் பங்கள் பெற்று வந்தன. தற்போது மேலும் 41 ஆயிரம் குடும்பங்கள் குறைவான வரு மானம் உள்ளவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. வருமானம் ஈட்ட பல வாய்ப்புகள் உள்ள தலை நகர்ப் பகுதியில் ஏன் இந்த நிலைமை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
