states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் சமூகதள பக்கம்

பீகாரில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளின் வெற்றி எஸ்ஐஆர்  அடிப்படையிலான வாக்கு நீக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும். சட்டவிரோத குடியேறிகளை நீக்குவதாக சொல்லி என்டிஏ ஆட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை, விளிம்புநிலை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த விளையாட்டை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால் அனைத்துக் காலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பொதுச் சேவை என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. அது ஒரு முடிவில்லாத பயணம். இதில் ஏற்ற இறக்கங்கள் வராமல் இருப்பதில்லை. ராஷ்டிரிய ஜனதா தளம் ஏழைகளின் கட்சி, ஏழைகளின் நடுவில் அவர்களின் குரலை உயர்த்திக் கொண்டே இருக்கும். எனது அரசியல் போராட்டம் தொடரும்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

பீகாரில் என்டிஏ கூட்டணிக்கு கிட்டிய பூகம்பம் போன்ற வெற்றிக்கு வாக்குகள் முறைகேடாக கையாளப்பட்டதே முக்கியக் காரணம் ஆகும். பீகார் தேர்தல் முடிவு ஜனநாயகத்திற்கு இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.

கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ்

தேர்தல் ஆணையம் பீகார் தேர்தலில் வெற்றி பெற என்டிஏவுக்கு உதவியுள்ளது. வாக்காளர்களை விலைக்கு  வாங்குவதற்காக ரூ.10,000 முதல் 30,000 வரை கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதை ஏன் தடுக்கவில்லை?