states

img

‘5 லட்சம் வீடுகளிலும் கொண்டாட்டம்’

‘5 லட்சம் வீடுகளிலும் கொண்டாட்டம்’

காசர்கோடு உலகில் வேறு எங்கும் சாத்தியமில்லாத அரிய சாதனையின் அறிவிப்பை, பாதுகாப்பான வீடுகளைப் பெற்ற 5 லட்சம் குடும்பங்களைச் சந்தித்தும், அவர்களுடன் இணை ந்து இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்)  ஊழியர்கள் கொண்டா டுவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் எம்.வி.கோவிந்தன் தெரி வித்தார். எல்டிஎப் வடக்குப் பகுதி பயணத்தின் தொடக்க விழாவி லும், காசர்கோடு நுள்ளிப்பாடியில் நடைபெற்ற வரவேற்பு பொதுக் கூட்டத்திலும் பயணக் குழு தலை வரான எம்.வி.கோவிந்தன் மேலும் பேசுகையில்,“கேரள அரசின் லைப் திட்டத்தில் 5 லட்சம் வீடுகள் பிப்ரவரியில் நிறைவடையும். இதற்கான விழாக்கள் ஐந்து லட்சம் வீடுகளிலும் ஏற்பாடு செய்யப்படும்.  சீனாவுக்குப் பிறகு, கேரளா வில்தான் தீவிர வறுமை ஒழிக்கப் பட்டது. நான்கு ஆண்டு செயல் முறை மூலம் 64,006 குடும்பங்கள் தீவிர வறுமையிலிருந்து விடு விக்கப்பட்டன. இனி, முழுமை யான வறுமை ஒழிக்கப்படும். பல  தசாப்தங்களுக்குப் பிறகும் இந்தி யாவில் வேறு எந்த மாநிலமும் இந்த சாதனையை எட்ட முடியாது என்பது உறுதி. அடுத்த இலக்கு கேரளாவை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவதாகும். அதற்காக, உள்கட்டமைப்புத் துறை மேலும் வளர வேண்டும்.  38 ஆயிரம் பேர் திரும்பினர் ஒன்றிய அரசு நம்முடன் இல்லை என்ற பெரிய சவாலை சமாளித்து கேரளா அதை செயல் படுத்தும். உள்கட்டமைப்புத் துறையில், கடந்த 10 ஆண்டுகளில் கிப்பி (KIIFB) மூலம் ரூ.96,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி செயல்படுத்தப்பட்டுள்ளது. உயர் கல்வியை இலவசமாக்கிய முதல் மாநிலம் கேரளா தான். மனித வளங்களும் கேரளாவுக்கு திரும்பி யுள்ளன. இந்த வகையில் 38,000 பேர் கேரளாவுக்குத் திரும்பி யுள்ளனர். குறிப்பாக இந்தப் பேரணி முன் வைக்கும் முதல் அறி விப்பு, வகுப்புவாதக் கலவரங் கள் இல்லாமல் கேரளம் பாது காக்கப்படும் என்பதுதான். மக்க ளின் வாழ்க்கைத் தரத்தை மேம் படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பது மற்றொரு வாக்குறுதியா கும். கேரள நிர்வாகத்தை மூன்றா வது முறையாக இடது ஜன நாயக முன்னணியிடம் ஒப்படைக்க அனைவரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார். கேரளாவில் எந்த வகுப்புவாத மோதலும் இல்லை முன்னதாக, கேரளாவை புதிய கேரளாவாக மாற்றிய 10 ஆண்டு கால எல்டிஎப் ஆட்சிக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் பினராயி விஜயன், வளர்ந்த கேரளாவின் அடையாள வடிவத்தை பய ணக்குழுத் தலைவரிடம் ஒப்படை த்து பயணத்தைத் தொடங்கி வைத்தார்.  அப்போது பேசிய முதல மைச்சர்,”சிலர் நீண்ட காலமாக ஆட்சி நிர்வாகத்திற்கு வெளியே இருக்கிறோம் என கவலை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.  ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டும்? எதிர்க்கட்சிகளின் இந்த கவலை குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் பாடப்புத்த கங்களை வழங்குவது, பள்ளிகளை பழுதுபார்ப்பது அல்லது மருத்துவ மனைகளை புதுப்பிப்பது பற்றி யது அல்ல. மாறாக அவர்களின் சொந்த நலன்களைப் பற்றியது. சிலர் நடைமுறை காரணங்க ளுக்காக தவறான உணர்வுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். மற்றவர்களும் ரகசியமாக பொய்ப்  பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த மண்ணில் வாழும் அனைத்து மதம் மற்றும் மதமற்ற  மக்களையும் சம மாகப் பார்க்கும் ஒரு அரசாங்கம்  உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் எந்த வகுப்புவாத மோதலும் இல்லை” என அவர் கூறினார்.