சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா
பஹல்காம் தாக்குதல், இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த சிறப்பு அமர்வும் நடைபெறவில்லை. அரசியல் கட்சிகளுடன் எந்த கலந்துரையாடலும் இல்லை. உருவாகி வரும் நிலைமை தொடர்பான மதிப்பீடு குறித்தும் தெளிவான பதில் இல்லை. நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் குழப்பமாகவே நகர்ந்து வருகிறது.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
பஹல்காம் தாக்குதல் எவ்வாறு நடந்தது என்பது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு பல கேள்விகள் உள்ளன. ஒன்றிய அரசு மற்றும் உள்துறை அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க முடியும். ஆனால் மவுனமாக இருப்பது சந்தேகத்தை தான் உருவாகும்.
திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ்
பிரதமர் மோடி,”என் நரம்புகளில் ஓடுவது ரத்தமல்ல, செந்தூரம்” என பேசுகிறார். ஒருவேளை “உயிரியல் அல்லாத (Non Biological)” மரபணுக்கள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால் இந்தியாவுக்குள் 200 கி.மீ., அளவில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் வெறும் காற்றாய் மறைந்துவிட்டனர். அவர்கள் எங்கே? பயங்கரவாதிகள், குற்றவாளிகள் கைது செய்யப்படாவிட்டாலோ அல்லது அழிக்கப்படாவிட்டாலோ, நீதி கிடைக்காது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரும் முடிவுக்கும் வராது. முதலில் நாட்டின் பாதுகாப்பு முறை மீது கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். அதுதான் மிக முக்கியமானது.