வாழ்க்கையோடு இணைந்ததுதான் அரசியல்; பெண்கள் அரசியல் களத்திற்கு வர வேண்டும்
அறிவியல் இயக்க கருத்தரங்கில் உ.வாசுகி பேச்சு
புதுக்கோட்டை, மே 22 - அன்றாட வாழ்க்கையோடு இணைந்த அரசியல் களத்திற்கு பெண்கள் முன்வர வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி அழைப்பு விடுத்தார்.
பெண்களின் பன்முக பிரச்சனைகள்: வர்க்க வேறுபாடுகளும் சமூக ஒடுக்குமுறையும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ‘சமம்’ அமைப்பின் சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ‘பெண்களும் அரசியலும்’ என்ற தலைப்பில் பேசிய உ.வாசுகி, எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான பிரச்சனை உள்ளது என சொல்ல முடியாது என்று தெளிவுபடுத்தினார். “ஏழை, நடுத்தர வர்க்கம், மேம்பட்ட கார்ப்பரேட் குடும்பங்கள் என பல்வேறு வகை யிலான பெண்கள் பொருளாதார ஏற்றத் தாழ்வு களோடு உள்ளனர். பட்டியலின, பழங்குடி யினப் பெண்களுக்கு வன்கொடுமைகள் உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறை கூடுதலான பிரச்சனையாக உள்ளது” என்றார்.
சிறுபான்மை பெண்களை குறிவைக்கும் ஒன்றிய அரசு
பல மதங்களைக் கொண்ட இந்திய நாட்டை ஆளுகிற ஒன்றிய அரசாங்கம் சிறுபான்மை பெண்களை குறிவைத்து தாக்குவதாக கடும் குற்றச்சாட்டு முன்வைத்த அவர், “கலெக்டர், கவர்னர், அரசு ஊழியர், ஆசிரியர்கள் மட்டுமல்ல; அன்றாடம் காய்ச்சிகளாக, அத்துக்கூலிகளாக பணியாற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்” என்றார்.
பெண்கள் மீதான வன்முறை கருப்பையிலேயே தொடங்குகிறது
பெண்கள் மீதான வன்முறை கருப்பை யிலேயே தொடங்குவதாக சாடிய உ.வாசுகி, போராடும் பெண்களை காவல்துறையினர் “உனக்கு என்ன கட்சி வேண்டி இருக்கு? கொடி வேண்டி இருக்கு? கோசம் வேண்டி இருக்கு” என்று சொல்லி அடிப்பதை பலமுறை நேரில் பார்த்ததாகக் கூறினார். “வளரிளம் பெண்கள் பாலியல் ரீதியாக வும், திருமண வயதில் வரதட்சணை அல்லது குடும்ப வன்முறைகளையும் சந்திக்க வேண்டி யுள்ளது. காவல்துறை, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசு அதிகாரிகள் தொடுக்கும் பெண்கள் மீதான வன்முறைகளை யும் கணக்கில் கொள்ள வேண்டும்” என்றார் அவர்.
அரசியல் சாக்கடை என்ற மாயபிம்பத்தை உடைக்க வேண்டும்
சாதாரண பெண்களுக்கு அரசியல் தேவை யில்லை என்கிற பார்வை சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளதாக விமர்சித்த உ.வாசுகி, “அர சியல் ஒரு சாக்கடை. அதில் இருந்து விலகி இருப்பது நல்லது என்று ஆண்டாண்டு காலமாக போதிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாக்கடை என்றால், இத்தனை பேர் ஏன் அதில் இருக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வேலையில்லை: கார்ப்பரேட் கொடுமை
கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடுமை யை எடுத்துரைத்த உ.வாசுகி, “சில நிறுவனங்கள் கர்ப்பிணிப் பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை. கருவுற்று இருப்பது இந்த நாட்டில் கிரிமினல் குற்றமா? மிக அதிக மான லாபத்திற்காக, பல மணி நேரம் வேலை செய்ய வைத்து தொழிலாளிகளை நிறுவனங்கள் கசக்கிப் பிழிகின்றன” என்று கடுமையாக விமர்சித்தார்.
மோசடியான பெட்ரோல் விலைக் கொள்கை
கச்சா எண்ணெய் விலை குறித்த அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய அவர், “ஆளுகின்ற அரசாங்கத்திற்கு தெரியாமலா விலைவாசி உயர்கிறது? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகமாகும் போது பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் அரசு, குறையும் போது ஏன் விலை யை குறைக்க மறுக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை இறங்கு முகமாக இருக்கும் நிலையில், ஒன்றிய அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலை யைக் குறைத்திருந்தால் விலைவாசியை பெருமளவு குறைத்து இருக்க முடியும்” என்றார்.
பொள்ளாச்சி வழக்கு: “எய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை”
பொள்ளாச்சி வழக்கில் 6 வருடம் கழித்து தீர்ப்பு வந்துள்ள நிலையில், இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் எய்யப்பட்ட அம்புகள்தான் என்று உ.வாசுகி கூறினார். “எய்தவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் இந்தப் புகாருக்குள்ளேயே கொண்டு வரப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் ஜனநாயக மாதர் சங்கம் மாபெரும் மனிதச் சங்கிலி உள்ளிட்ட பல கட்டப் போராட்டங்களை நடத்தியதையும், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்ட இந்த வழக்கில் 8 பெண்கள் மட்டுமே புகார் கொடுக்க முன்வந்ததையும், அதிலும் ஒரு பெண்தான் முதலில் துணிந்து புகார் கொடுத்ததையும் சுட்டிக்காட்டினார்.
பாலியல் வன்கொடுமையை மான - அவமானமாக பார்க்கக் கூடாது
பாலியல் வன்கொடுமை குறித்த சமூகத்தின் பார்வையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய உ.வாசுகி, “பெண்கள் யாரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று புகார் கொடுக்க முன்வருவ தில்லை. பாலியல் வன்முறையை மான, அவ மானமாகப் பார்க்கக் கூடாது. அதை ஒரு குற்றமாகப் பார்க்க வேண்டும். இந்த மாதிரி யான சூழலை ஏற்படுத்தி இருக்கும் அரசியலை மாற்றுகிற கடமை பெண்களுக்கும் உண்டு” என்றார்.
அறிவியல் இயக்கத்தின் கற்பித்தல்: கேள்வி கேட்கும் பழக்கம்
அறிவியல் இயக்கத்தின் அணுகுமுறையை பாராட்டிய அவர், “எல்லாவிதமான விசயங் களையும் அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும் என்றுதான் அறிவியல் இயக்கம் பழக்கப்படுத்தி இருக்கிறது. ஏன் என்ற கேள்வியை கேட்காமல் வாழ்க்கை இல்லை. சிந்திப்பதும், கேள்வி கேட்பதும்தான் அடுத்த கட்டத்துக்கு நம்மை கொண்டு செல்கிறது” என்றார்.
களப் போராட்டமும் கருத்தியல் போராட்டமும்
சமூக மாற்றத்திற்கு இரு வகையான போராட்டங்கள் தேவை என்று தெளிவு படுத்திய அவர், “சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சிந்தனைகளை அனைவரின் சிந்தனைகளாகவும் மாற்றும் பொது புத்தியை மாற்ற வேண்டும். இதற்கு களப் போராட்டம் மட்டும் போதாது. மூளைக்குள் புகுத்தி வைத்திருக்கிற கருத்துக்களை மாற்று வதற்கான கருத்தியல் போராட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.
தேசிய கல்விக்கொள்கையில் “சமூக நீதி இல்லை”
தேசிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சித்த உ.வாசுகி, “அதில் சமூக நீதி இல்லை. பெண்களுக்கான முக்கியத்துவம் இல்லை. தனியாருக்கு கல்வி நிலையங்களை திறந்துவிடும் நிலை உள்ளது. பாடத்திட்டத்தில் மதவெறிக் கருத்துகளை புகுத்தும் ஏற்பாடு உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
போர் என்ற பெயரில் அப்பாவிகளை கொல்வது நியாயமா?
ஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையை பற்றி பேசிய உ.வாசுகி, “பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாதிகளை ஒழிக்க எடுக்கப் பட்ட ராணுவ நடவடிக்கை சரியானது. ஆனால் போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொல்வது என்ன நியாயம்? ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயர் வைத்ததிலேயே அரசியல் உள் ளது. அதில் மதம் இருக்கிறது. ஆணாதிக்கம் இருக்கிறது” என்று விமர்சித்தார்.
தெளிவான நிலைப்பாடு எடுத்தாலே போதும்
பெண்களுக்கு அழைப்பு விடுத்த உ.வாசுகி, “நீங்கள் நேரடியான அரசியல் களத்திற்குக்கூட வர வேண்டியது இல்லை. ஒரு சர்ச்சை வரும்போது அதில் நமக்கான தெளிவான நிலைப்பாட்டை எடுத்தாலே போதும். அதுவே, மிகப் பெரிய அரசியல் கடமையாக இருக்கும்” என்று கூறினார்.
சமமான அரசியலுக்கு அழைப்பு
“அனைவரையும் சமமாக நடத்துகிற, சாதிய வேறுபாடு இல்லாத, பெண்களை மதிக்கக்கூடிய, மத வித்தியாசம் பார்க்காமல், அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும் சமமாகப் பார்க்கக் கூடிய அரசியலை, உழைக்கும் மக்கள் உயர்வுக்கு வர வேண்டும் என்று கொள்கை முடிவு எடுக்கிற மதச்சார் பின்மை, ஜனநாயக, சமத்துவ அரசியலை முன்னெடுக்கிற அரசியலுக்கு நீங்கள் வர வேண்டும்” என்று முடித்தார்.
கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்
அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இரா.இராமதிலகம் தலைமை வகித்தார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணை ப்பாளர் என்.கண்ணம்மாள், அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் மா.குமரேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.