ஆந்திராவில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம்
பாஜக கூட்டணி ஆளும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை அன்று ஜகதம்பா சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விசாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் எம். ஜக்கு நாயுடு தலைமையில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் நடத்தின. போராட்டத்துக்கு இடையே எம்.ஜக்கு நாயுடு கூறுகையில்,”விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட் ஆலையில் ஒன்றியத்தில் உள்ள பாஜக அரசு 5,600 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுமார் 3,000 பேர் ஏற்கனவே வேலை இழந்துள்ளனர்” என கூறினார்.