world

img

தீக்கதிர் உலக செய்திகள்

தலைநகரை மீட்டதாக  சூடான் ராணுவம் அறிவிப்பு

உள்நாட்டுப் போரில் தலைநகரை மீட்டுவிட்டதாக சூடான் ராணுவம் அறிவித்துள்ளது. சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே இரு ஆண்டுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இப்போரில் தலைநகர் கார்டூம் உட்பட பல பகுதிகளை துணை ராணுவம் கைப்பற்றியிருந்தது. கடந்த சில வாரங்களாக சூடான் தலைநகரைச் சுற்றி துணை ராணுவம் கைப்பற்றி இருந்த பல பகுதிகளை மீட்டு வந்த அந்நாட்டின் ராணுவம் தற்போது தலைநகர் கார்டூமையும் மீட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு டிரம்ப்  முழு ஆதரவு : நேதன்யாகு

அமெரிக்கா - இஸ்ரேலின் உறவுகள் நன்றாக உள்ளது என பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா அரபு நாடுகளுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதனால் இஸ்ரேலை ஒதுக்காது. தனக்கும் டிரம்பிற்கும் இடையே விரிசல் இருப்பதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை. கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே இஸ்ரேலுக்கு எனது முழு ஆதரவு உள்ளது என டிரம்ப் என்னிடம் தெரவித்துள்ளார் எனவும் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் ராணுவச் செலவு  பொதுமக்கள் தலையில் சுமை

ராணுவச் செலவை அதிகரிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு சுமை யாக மாறும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் அலெக்சாண்டர் வெனெ டிக்டோவ் தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுக ளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒட்டு மொத்த ராணுவச் செலவு  567 பில்லியன் டாலர் கள் வரை அதிகரிக்கலாம். இதற்காக ஐரோப்பிய நாடுகளில்  சுகாதாரம், சமூக பாதுகாப்பு, கல்வித் திட்டங்களுக்கான நிதியை வெட்டுவதன் மூலம் ஈடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த  விவசாயப் பாரம்பரிய அமைப்பு

சீனாவில் மூன்று இடங்களை உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவசாய பாரம்பரிய அமைப்புகள் என ஐ.நா உணவு  மற்றும் வேளாண்மை அமைப்பு அங்கீகரித் துள்ளது. ஜி ஜியாங் மாகாணத்தில் உள்ள டெக்கிங் நன்னீர் கூட்டு மீன்பிடி அமைப்பு, ஃபுஜியன் மாகாணத்தில் உள்ள ஃபுடிங் வெள்ளை தேயிலை கலாச்சார அமைப்பு, கன்சு மாகாணத்தில் உள்ள கோலான் ஷிச்சுவான் பண்டைய பேரிக்காய் பழத்தோட்டம் ஆகியவையே அந்த மூன்று இடங்கள். இவ்வாறு சீனாவில் 25 இடங்களை ஐ.நா.அங்கீகரித்துள்ளது.

ஜி-20 உச்சி மாநாடு:   அமெரிக்கா பங்கேற்காது

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது என வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உறுதிப்படுத்தியுள்ளார். ஜி-20 உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் ஜி-20 நாடுகளின் முன்னுரிமைகளை பிரதிபலிக்கத் தவறிவிட்டது. அமெரிக்காவின் போட்டியாளர்களான ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் அதிகமாக தென்னாப்பிரிக்கா தன்னை இணைத்துக் கொள்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து உதவி : விசாரணை நடத்த ஜெர்மி கோர்பைன் வலியுறுத்தல்

லண்டன், மே 22 - 2023 அக்டோபர் முதல் காசா இனப்படு கொலையில் இங்கிலாந்தின் பங்கு என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என லேபர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பைன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளார்.  தற்போது இங்கிலாந்தில் ஆட்சியில் உள்ள  லேபர் கட்சி தலைமையிலான அரசு காசாவில் இஸ்ரேல் நடத்தி வருகின்ற இனப்படு கொலைக்கு உடந்தையாக இருக்கின்றது என  சுயேச்சை எம்.பி.யான கோர்பைன் பலமுறை குற்றம் சாட்டியுள்ளார். தற்போது காசாவில் இஸ்ரேல் ராணுவம்  நடத்தி வரும் இனப்படுகொலை தாக்குதல் களில் இங்கிலாந்திற்கு உள்ள தொடர்புகள் என்ன என்பது குறித்து உண்மையை வெளிக் கொண்டுவர சட்டப்பூர்வமான முறையில் ஒரு விரிவான சுதந்திரமான பொது விசாரணை யை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.   மேலும் அவர் முன் மொழிந்துள்ள மசோதா வில் இங்கிலாந்து இஸ்ரேலுக்கு இடையிலான ஆயுத விற்பனை, ஆயுத உதவி, கண்காணிப்பு டிரோன், விமானங்கள், ஏவுகணை தடுப்பு அமைப்பு பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும். 2023 முதல் இஸ்ரேலுடனான அரசியல் பொருளாதார, ஆயுத உடன்பாடு, வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் விசாரணைக்குள் கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர்  ஸ்டார்மருக்கு கோர்பைன் ஒரு கடிதம் அனுப்பி யுள்ளார். அக்கடிதத்துடன் இம்மசோதாவை யும் இணைத்துள்ளார். கோர்பைன் அனுப்பி யுள்ள கடிதத்தில் 40 எம்.பி.க்கள் கையெழுத் திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன குழந்தைகளுக்கு சுமார் 11 வாரமாக எந்த உணவுப் பொருட்களையும் அனுப்பாமல் இனப்படுகொலையை தீவிரப் படுத்திய இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ்  கனடா ஆகிய நாடுகள் இணைந்து கண்டனம் தெரிவித்திருந்தன.  இதனை குறிப்பிட்ட கோர்பைன்  தாக்குதல் நடத்துவதற்கு தேவையான ஆயுதங்களை தொடர்ந்து இஸ்ரேலுக்கு வழங்கிக்கொண்டு இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகின்ற தாக்குதல் களை நீங்கள் எதிர்ப்பதாகச் சொல்ல முடி யாது.  இனப்படுகொலை செய்து வரும் இஸ்ரேல் அதனை  நிறுத்திக்கொள்ள ஒரே ஒரு வழி இருக்கிறது. அது இஸ்ரேலுடனான ராணுவ ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வருவது தான்.  அதுமட்டுமின்றி அதன் மீது தடைகளையும் விதிக்க வேண்டும் என கோர்பைன் தெரிவித்துள்ளார்.