மீனவ கிராம மக்களுக்கு நடமாடும் மருத்துவமனை
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் உதவியோடு திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூர் தாழங்குப்பம் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவசர காலத்தில் முதலுதவி சிகிச்சை வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவமனை சேவையை கலாநிதி வீராசாமி எம்பி துவக்கிவைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், சிபிசிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சங்கர், பொருளாதார பிரிவு இயக்குநர் ரோகித் குமார் அகர்வாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.