tamilnadu

img

மக்கள் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை வெளியீடு

மக்கள் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை வெளியீடு

சென்னை, மே 22 - மக்கள் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை அகில இந்திய பாதுகாப்புக்குழு வியாழனன்று (மே 22) வெளியிட்டது. ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கையை நாடாளு மன்றத்தில் விவாதிக்காமலும், மாநில அரசுகளுடன் ஆலோசிக்காமலும், கல்வியாளர்கள், மாணவர்களிடம் கருத்துக்களை புறந்தள்ளி அமல்படுத்தியுள்ளது. அதற்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை-2025ஐ அகில இந்திய பாதுகாப்புக்குழு வெளி யிட்டுள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டு சென்னையில் செய்தியாளர்களிடம் குழுவின் மாநிலச் செயலாளர் பேரா கே.யோகராஜன் கூறுகையில், தேசிய கல்விக் கொள்கை-2020 வகுப்புவாத கண்ணோட்டத்தோடு, ஜனநாயகமற்ற நோக்கோடு, அறிவியலுக்கு எதிரானதாக உள்ளது. தனியார்மயமாக்கலை ஊக்குவிக்கிறது. ஒட்டு மொத்த உயர்கல்வியையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்கிறது. தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தியுடன் கல்விக்கான நிதி குறைந்துள்ளது. ஆகவே அதற்கு மாற்றாக கல்வியை மாநிலப் பட்டிய லுக்கு கொண்டு வர வேண்டும். கல்விக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். 3 முதல் 7 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டணமில்லா கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். மதச்சார்பற்ற, அறிவியல் பூர்வமான, ஜனநாயக தன்மை கொண்டதாகவும், அனைவருக்கும் கல்வி வழங்கும் வகையில் புதிய வரைவு அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள், கல்வி யாளர்கள், பல்வேறு அமைப்புகளின் கருத்துக்களை பெற்று, இந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்  பட்டு 2026ஆம் ஆண்டு ஜனவரியில்  வெளியிடப்படும்’’ என்றார்.