ஐரோப்பா லீக் கால்பந்து ; டோட்டன்ஹாம் சாம்பியன்
ஐரோப்பிய கிளப் கால்பந்து அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அன்று அதிகாலை நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் டோட்டன்ஹாம் - மான்செஸ்டர் யுனைட்டெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிக பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த்
சர்வதேச பேட்மிண்டன் தொடர் களில் மிக முக்கியமானது மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடராகும். இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், அயர்லாந்து நாட்டின் நுயெனை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 23-21, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த். நீண்ட காலமாக பேட்மிண்டன் தொடர்களில் கலந்து கொள்ளாமல் இருந்த கிடாம்பி ஸ்ரீகாந்த், தனது காலிறுதி ஆட்டத்தில் பிரான்சின் டோமா போபோவை எதிர்கொள்கிறார்.
ஒரே நாளில் 3 இந்தியர்கள் அவுட்
வியாழக்கிழமை அன்று நடை பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியா சார்பில் ஸ்ரீகாந்த் மட்டுமே காலி றுதிக்கு முன்னேறினார். ஹெஜ்.எஸ். பிரணோய், ஆயுஷ் ஷெட்டி, எஸ்.கரு ணாகரன் உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து வெளி யேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாங்கும் சம்பளமோ ரூ.30 லட்சம் ; அபராதமோ ரூ.12 லட்சம் இது திக்வேஷ் ராத்தியின் ஸ்டைல்
தில்லியைச் சேர்ந்த 25 வயது இளைஞன் திக்வேஷ் ராத்தி நடப்பாண்டு ஐபிஎல் சீச னில் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 30 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஓரளவு நன்றாக பந்துவீசும் (சுழற்) திக்வேஷ் ராத்தி மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டின் ஸ்லெட்ஜிங் (வம்பு இழுத்தல்) பாணியான “நோட் புக் (கையில் எழுதி வெளியே போ என்று கூறுதல்)” பிரிவை தீவிரமாக பயன்படுத்தி அபராதம், ஒரு போட்டியில் விளையாட தடை போன்றவற்றை பெற்றுள்ளார். இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் ரூ.30 லட்சம் ஐபிஎல் சம்பளத்தில் “நோட் புக்” ஸ்லெட்ஜிங் சம்பவங்களுக்காக ரூ. 9 முதல் ரூ.12 லட்சம் வரை அபராதம் கட்டியுள்ளார். அதாவது 45% சம்பளத்தை அபராதமாக இழந்துள்ளார் திக்வேஷ் ராத்தி. 18 ஆண்டுகால ஐபிஎல் சீசனில் இதுபோன்ற சம்பவம் இதுவரை நிகழ்ந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2025 இன்றைய ஆட்டம்
பெங்களூரு - ஹைதராபாத்
நேரம் : இரவு 7:30 மணி இடம் : எகானா மைதானம், லக்னோ, உ.பி. சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)
மீண்டும் சாதனை படைப்பாரா நீரஜ் சோப்ரா
இன்று போலந்து நாட்டில் ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப்
ஒலிம்பிக் பதக்க நாயகனும், தடகள உலகின் நட்சத்திர வீரருமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளியன்று போலந்து நாட்டில் நடைபெறும் ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறார். ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவுப் போட்டி என்ற பெயரில் நடைபெறும் இந்த போலந்து சாம்பியன்ஷிப் தொடரில் ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் என உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். கடந்த வாரம் தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் முதன்முறையாக 90 மீட்டருக்கும் (90.23 மீ) அதிகமான அளவில் ஈட்டி எறிந்து சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, போலந்து சாம்பியன்ஷிப் தொடரிலும் புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.