தீக்கதிர் புதிய அலுவலக கட்டடத்திற்கான நிதி அளிப்பு
கோவையில் கட்டப்படும் தீக்கதிர் புதிய அலுவலக கட்டடத்திற்காக, திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சபுரோ எம்.ரங்கசாமி, அவரது சகோதரர்கள் எம்.கந்தசாமி, எம்.பரமசிவம் மற்றும் அவர் குடும்பத்தார் சார்பாக, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் நிதியை கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணனிடம் புதன்கிழமை வழங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.ஆர்.கணேசன், ஆர்.மைதிலி, சபுரோ ரங்கசாமியின் மகன்கள் ஆர்.சிவசண்முகம், ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் திருமலை நகர் கிளை உறுப்பினரும், ஈரோடு பனியன் ஜவுளி வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளருமான டி.எம்.எல்.ஆறுமுகம், தீக்கதிர் கோவை அலுவலகக் கட்டிட நிதியாக ரூ.50 ஆயிரத்தை கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோரிடம் வழங்கினார். உடன் வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி ஆகியோர் உள்ளனர்.