கர்நாடக முதலமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்
காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநில முதலமைச்சராக இருப்பவர் சித்தராமையா. துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் உள்ளார். இந்நிலையில், அக்., 11ஆம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் வீடு களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டது. இந்த மிரட்டல் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை, உடனடியாக கர்நாடக காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து, சித்தரா மையா, டி.கே.சிவக்குமார் வீடுகளில் கர்நாடக வெடிகுண்டு செயலிழப்பு நிபு ணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த சம்ப வம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கர்நாடக காவல்துறை மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என செய்திகள் வெளியாகி யுள்ளது. ஒரு மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் நாட்டில் அதிர்வலையை ஏற் படுத்தியுள்ளது. மிரட்டல் விடுத்தது அக்., 11ஆம் தேதி ஆகும். ஆனால் அக்., 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தான் வெடிகுண்டு மிரட்டல் தொ டர்பான விஷயம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.