states

img

2024 மக்களவை தேர்தலில் ரூ.1,737.68 கோடி செலவு செய்த பாஜக

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் செலவினங்கள் குறித்த அறிக் கையை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில்,”2024 ஆம் ஆண்டு  பாஜக தேர்தலுக்காக ரூ.1,737.68 கோடி செலவிட்டுள்ளது. இதில் பிரச்சாரத் துக்காக மட்டும் ரூ. 884.45 கோடி செல விடப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர்கள் தொடர்பான செலவுகளுக்கு ரூ.853.23 கோடியும், வேட்பாளர்களின் தனிப்பட்ட செலவுகளுக்கு ரூ. 245.29 கோடியும் செலவு செய்துள்ளது. அதே போல பாஜகவின் ஊடக விளம்பரத்துக்காக செலவிட்ட ரூ. 611.50 கோடியில், கூகுள் மூலமான விளம்பரங்களுக்காக கூகுள் இந்தியாவுக்கு ரூ.156.95 கோடியும், முகநூல் விளம்பரங்களுக்கு ரூ. 24.63 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இது தவிர சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள், கட்சிக் கொடிகள் போன்ற விளம்பரப் பொருள்களுக்காக ரூ. 55.75 கோடி செலவிட்டுள்ளது. நட்சத்திர பிரச்சாரப் பேச்சாளர்களான பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்துத்  துறை அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்ட வர்கள் பங்கேற்கும் பிரச்சாரத்தின் பயணச் செலவுகளுக்காக ரூ. 168.92 கோடியும், பாஜகவின் பிற தலைவர்களின்  பயணச் செலவாக ரூ. 2.53 கோடியும் செல விட்டுள்ளது” என அதில் கூறப்பட்டு உள்ளது. பாஜகவின் செலவினத்தில் மூன்றில் ஒரு பங்காக வெறும் ரூ.584,65 கோடி  மட்டுமே காங்கிரஸ் செலவு செய்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.