states

img

தேவாலயத்திற்குள் ஜெய்ஸ்ரீராம் பாடல் யுடியூபர் மூலம் மேகாலயாவில் மத வன்முறையை தூண்ட பாஜக திட்டம்

ஷில்லாங் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா வில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேகாலயாவில் 74% அளவில் கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். இந்துக்கள் 11% அளவில் வாழ்ந்து வரும் நிலையில், அரசி யல் ஆதாயத்திற்காக மேகால யாவில் மத வன்முறையை தூண்டும் வேலையை துவங்கி யுள்ளது. மேகாலயா தலைநகர் ஷில்லாங்கின் மவுலானோங் எபிபெனியில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் நுழைந்த பிரபல யுடியூபர் ஆகாஷ் சாகர் ஜெய்ஸ்ரீராம் என்று கூறிக்கொண்டு ராம பக்திகானம் பாடினார். ஆகாஷ் சாகர் தேவால யத்திற்குள் ஆட்கள் இல்லாத நேரத்தில் தனது நண்பர்களுடன் பாதிரியார் உரையாற்றும் மைக்கில் ராம பக்திகானம் பாடி யதால் கிறிஸ்தவ மக்களுக்கு முதலில் இந்த விஷயம் தெரிய வில்லை. ஆனால் ஆகாஷ் சாகர் தேவாலயத்தில் பாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவ, மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பினரரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆகாஷ் மீது தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைதல், நல்லி ணக்கத்தை சீர்குலைத்தல், மத நம்பிக்கைகளை இழிவு படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஷில்லாங் நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்குப்பதிவை எதிர்த்து இந்துத்துவா குண்டர்கள் போராட்டம் ஆகாஷ் மீது வழக்குப்பதிவு செய்த நடவடிக்கைக்கு எதிராக இந்துத்துவா குண்டர்கள் மவுலானோங் எபிபெனியில் போ ராட்டம் நடத்தினர். மேலும் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிட்டதற்காக இந்த வழக்கா என்று கேள்வி எழுப்பி, மசூதியில் மதக் கோஷங்களை எழுப்பியவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நடவ டிக்கையை சுட்டிக்காட்டியும், போலீசார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கண்ட ஆகாஷ் வீடியோ வெளி யிட்டுள்ளார்.  தேவாலயத்திற்குள் ஆகாஷை ஜெய்ஸ்ரீராம் பாடலை பாடச் செய்து மேகாலயாவில் மத வன்முறையை தூண்ட பாஜக திட்டமிட்டுள்ளது கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம் சாட்டி யுள்ளனர்.