states

img

கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்த கொலைக் குற்றவாளிகளைக் களமிறக்கும் பாஜக தில்லி முதல்வர் அதிஷி குற்றச்சாட்டு

70 தொகுதிகளை கொண்ட தில்லி மாநிலத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி  ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல்  நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ஆம் தேதி எண்ணப்பட உள்  ளது. இந்நிலையில், சனிக்கிழமை அன்று  தான் போட்டியிடும் புதுதில்லி தொகுதி யில் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென கெஜ்ரிவாலின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை பாதுகாப்பு அதிகாரிகள் காரில்  ஏற்றி அனுப்பி வைக்க முயற்சித்த போது,  ஒரு கல் காரின் மேற்கூரையில் வந்து  விழுந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் கெஜ்ரிவால் மீது  தாக்குதல் நடத்த கொலை குற்றவாளி களை பாஜக களமிறக்குகிறது என தில்லி  முதல்வர் அதிஷி குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “புதுதில்லி சட்டமன்ற தொகுதியில் சனிக்கிழமை அன்று கெஜ்ரிவாலின் கார்  தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதல் பாஜக குண்டர்களால் தான் நடத்தப்பட்டது. கெஜ்ரிவாலைத் தாக்கியவர்கள் யார்  எனக் கூர்ந்து கவனித்தால், அதில் ஒரு வரின் பெயர் ஷாங்கி என்று தெரிகிறது.  அவர் பாஜகவில் துணைத் தலைவராக உள்ளார். அவர் தனது பகுதியில் அடிக்கடி  பர்வேஷ் வர்மாவின் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். பிரச்சாரங்களின் போது பர்வேஷ் வர்மாவுடன் காணப்படுகிறார். அவருக்கு நெருக்கமானவராகவும் உள்  ளார். ஷாங்கி மீது பல்வேறு காவல்  நிலையங்களில் கொள்ளை, தாக்குதல்,  கொலை வழக்குகள் உள்ளன. ஏற்கெ னவே கொள்ளையின் போது கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள இவ ரைப் போல கொடுங்குற்றவாளிகள் அர விந்த் கெஜ்ரிவாலை தாக்க அனுப்பப் பட்டுள்ளனர். மற்றொரு குற்றவாளி ரோகித் தியாகி, அவரது சமூக வலை தள பக்கத்தில் பர்வேஷ் வர்மாவுடன் உள்ள படங்கள் உள்ளன. அவரும் பர்வே ஷுடன் பிரச்சாரங்களில் காணப்படு கிறார். தியாகியும் ஒரு கொடுங்குற்ற வாளிதான். அவர் மீதும் பல வழக்குகள் உள்ளன” என அவர் கூறினார்.