states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தற்போதைக்கு தகவல் அறியும் உரிமைக்கு (ஆர்டிஐ) மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023 ஆகும். இது மூன்றாம் தரப்பினருக்கு நம்பகத்தன்மையை வழங்குவதன் மூலம் தகவல் அறியும் உரிமையை அழிக்கப் போகிறது..

பாஜக ஆட்சியில் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் மிகுந்த ஆபத்தில் உள்ளது. நாடாளுமன்றம், அமைச்சரவை மற்றும் பிற அமைப்புகள் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்பதை முதலில் நாம் அறிய வேண்டும். தற்போதைய சூழலில் நாட்டில் அனைத்துமே ஆபத்தில் தான் உள்ளன.

.இடஒதுக்கீடு உச்சவரம்பு 50% என்ற தடையை நீக்கி காட்டுவோம். அரசியல் சாசனத்திற்கும், மனுதர்மத்திற்கும் இடையேயான போரை நாடு பார்த்து வருகிறது. வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் பாஜக- ஆர்எஸ்எஸ் கூட்டணிக்கு எதிரான போராட்டம் சித்தாந்த ரீதியானது. 

எல்லையில் ஊடுருவும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராணுவத்திலும் பிஎஸ்எப்பிலும் நிரந்தரமாக மக்களைச் சேர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை நான் வலியுறுத்தி வருகிறேன். நடிகர் சைப் அலி கானைத் தாக்கியவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றாலும், இதனை வைத்து அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

சைப் அலிகானை கத்தியால் குத்திய  வழக்கில் சனிக்கிழமை அன்று சத்தீஸ்  கர் ரயில் நிலையத்தில் ஒருவர் பிடிப்பட்ட நிலை யில், ஞாயிறன்று அதிகாலை மும்பையில்  உண்மை குற்றவாளி முகமது அலியை (வங்க தேசத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது) மும்பை போலீசார் கைது செய்தனர். இதனை யடுத்து சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டார்.

“நில ஒதுக்கீடு விவகாரத்தில் எனது தலையீடு எது வும் இல்லை. நான் விதிமீறலில் ஈடுபட வில்லை. என்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயற்சி நடக்கிறது” என கர்நாடக முதல்வர் சித்த ராமையா குற்றம் சாட்டியுள்ளார்.