டிரம்ப் பதவியேற்பு விழா: ரூ.1,731 கோடி நன்கொடை திரட்டல்
நியூயார்க், ஜன., 19- அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ளார். இவரது பதவி யேற்பு விழாவுக்கு 200 மில்லி யன் டாலர் (சுமார் ரூ.1,731.5 கோடி) நன்கொடை திரட்டப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடும் குளிர் காரணமாக, 40 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக மூடிய அரங்கில் விழா நடைபெற உள்ளது. அமைச்சரவை உறுப்பினர் கள் உட்பட 500 முக்கிய பிர முகர்கள் கலந்து கொள் கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இத்தாலி பிரதமர் ஜியார் ஜியா மெலோனி, தொழில்மு னைவோர்களான எலான் மஸ்க் (டெஸ்லா), ஜெப் பெசோஸ் (அமேசான்), மார்க் ஜூக்கர்பெர்க் (மெட்டா) ஆகி யோர் பங்கேற்க உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், திரட்டப்பட்ட நன்கொடை குறித்த விவரங்கள் - யார், எவ்வளவு வழங்கினர் என் பது உள்ளிட்ட தகவல்கள் - வெளியிடப்படவில்லை.
ஜன.25 வரை பொங்கல் பரிசு தொகுப்பு
சென்னை, ஜன.19- பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 34,793 நியாய விலைக் கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாட்டுக் கோமியம் தீங்கு விளைவிக்கக் கூடியது
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
புதுதில்லி சென்னை மேற்கு மாம் பாலத்தின் ஒரு கோசா லையில் மாட்டுப் பொங்கலுக்கு நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காம கோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சி யில், “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. பாக்டீ ரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள் ளது” எனக் கூறினார். கோமியம் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படும் என அறிவியல் பூர்வ ஆதா ரம் இல்லாத நிலையில், அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற் படுத்தி வருகிறது. இந்நிலையில், கோமியம் குடிப்பது மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “பசுக் கள், எருமைகளின் சிறுநீர் (கோமி யம்) மாதிரிகளை இந்திய கால் நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய் வுக்கு உட்படுத்தியது. இதில் எஸ்ச ரிசியா கோலை, சால்மொனெல்லா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. மனி தர்கள் கோமியத்தைக் குடித்தால் அதில் இருக்கும் பாக்டீரியா மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சி அறி வியலாளர் போஜ் ராஜ் சிங் கூறு கையில், “எருமைகளின் சிறுநீரை விட பசுக்களின் சிறுநீரில் நோய்த் தடுப்பு சக்தி உள்ளதாக மனிதர்கள் கூறுகின்றனர். ஆனால் பசுக்க ளின் சிறுநீரில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக நம்பப்படுவதைப் பொது மைப்படுத்த முடியாது. கோமி யத்தை மனிதர்கள் குடிக்கலாம் என எப்போதும் பரிந்துரைக்க முடி யாது” என அவர் கூறினார்.
கொல்கத்தா பாலியல் வழக்கில் இன்று தண்டனை விபரம் அறிவிப்பு
“மகனை தூக்கிலிட்டாலும் கவலைப்பட மாட்டேன்”
கொல்கத்தா மேற்கு வங்கத்தில் முதல் வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரி ணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந் துள்ளது. தலைநகர் கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்து வக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்த பயிற்சி மாணவி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி பாலி யல் பலாத்காரம் செய்து படு கொலை செய்யப்பட்டார். மருத் துவக் கல்லூரி கருத்தரங்கு அறையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக் டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் உட்பட நாடு முழு தும் பயிற்சி மருத்துவர்கள் போரா ட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என சனிக்கிழமை அன்று சீல்டா நீதி மன்றம் அறிவித்துள்ளது. அவ ருக்கான தண்டனை விபரம் திங் கள்கிழமை வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், மகனை தூக்கிலிட்டாலும் கவலைப்பட மாட்டேன் என சஞ்சய் ராயின் தாய் மாலதி ராய் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “நான் சட்டத்தின் தீர்ப்பை எதிர்கொள் கிறேன். என் மகன் குற்றவாளி என்றால், அவன் தண்டிக்கப்பட வேண்டும். அவனது தலைவிதி என கருதுகிறேன். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். பெண் பயிற்சி மாணவியின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடி யும். கடும் தண்டனை கிடைக்கட் டும். சஞ்சய் ராயை தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறினாலும் அதனையும் ஏற்கி றேன்” என்றார். இது குறித்து சஞ்சய் ராயின் சகோதரி கூறுகையில், “எனது சகோதரர் (தம்பி) செய்தது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பயங்கரமானது. இதைச் சொல்லும்போதே என் இதயம் உடைகிறது. இந்தத் தவறை அவன் செய்திருந்தால் கடும் தண்டனை வழங்க வேண் டும். பாதிக்கப்பட்டவர் என்னைப் போன்று ஒரு பெண் டாக்டர்” என்றார். சஞ்சய் ராய் நீதிமன்றக் காவ லில் இருந்தபோது, தாயும் சகோ தரியும் நேரில் வந்து பார்க்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி மீது அசாமில் வழக்கு
ஜனவரி 15ஆம் தேதி தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்ற னர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நாட்டில் உள்ள அனைத்து நிறு வனங்களையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி உள்ளது. இப்போது நாம் (காங்கிரஸ்) பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு (மோடி அரசுக்கு) எதிராகவும் போராடி வருகிறோம்” எனக் கூறினார். ராகுல் காந்தியின் பேச்சை அப்படியே திரித்து, “நம் நாட்டில் இருந்து கொண்டே இந்திய அரசுக்கு எதிராகப் போராடு கிறோம் என ராகுல் காந்தி உள் நோக் கத்துடன் பேசி வருகிறார்” என பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், ஜனவரி 18ஆம் தேதி, ராகுலின் பேச்சு தேசதுரோகத்திற்கு இணையானது எனக் கூறி பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் மோன்ஜித் சேத்தியா என்பவர் பான் பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள் ளார். புகாரை உடனடியாக ஏற்றுக் கொண்ட போலீசார் ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 158 (இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை விளைவித்தல்), 191(1) (தேச ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படுதல்) ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெரியார் பல்கலை. முறைகேடு சாட்சிகளிடம் காவல்துறை விசாரணை
சேலம், ஜன.19- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக் கழக விதிகளை மீறி பூட்டர் என்ற தனியார் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த துணைவேந்தர் ஜெகநாதன் நீதிமன்றத்தில் பெற்றிருந்த தடையை நீக்கி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும், முறைகேடு தொடர்பான வழக்கை காவல்துறை விசாரிக்கலாம் என்றும் அனுமதி அளித்திருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் ரமலி ராம்லட்சுமி வழக்கு தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்கி உள்ளார். இந்த வழக்கில் சாட்சியாக கருதப்பட்ட பல்கலைக்கழக தொழிலாளர் சங்க செயலாளர் சக்திவேல், அமைப்பு செயலாளர் கிருஷ்ணவேணி ஆகி யோருக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப் பட்டது. அதன்படி இருவரும் மாலை உதவி ஆணை யாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்களை கூறினர். இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பதிவாளர் தங்கவேல் மற்றும் பேராசிரியர் சதீஷ்குமார் உள்ளிட்டவர்களை விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு
மயிலாடுதுறை,ஜன.19- மயிலாடுதுறையில் கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நாசமாகின. மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர் நீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. பருவ மழையில் தப்பிய பயிர்கள், புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கூடுதல் செலவு செய்து மருந்துகள் அடித்து பயிர்களை காப்பாற்றினர். இந்நிலையில் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான பயிர்கள் அடியோடு நீரில் மூழ்கியுள்ளன. வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாததால், தண்ணீர் வடிவதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து முழு காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தி லும் அறுவடைக்கு தயாராக இருந்த 15ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஐஐடி இயக்குநர் தவறான கருத்துக்களை கூறக்கூடாது அமைச்சர் பொன்முடி கண்டனம்
விழுப்புரம்,ஜன.19- விழுப்புரம் அரசு மருத்துவமனையில் விழுப்புரம் மாவட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை தமிழக வனத்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறுகையில், “நவீன மருத்துவ வசதிகள் வளர்ந்து வரும் காலத்தில், நவீன மருத்துவ வசதிகள் எல்லோரிடமும் சென்றடைய வேண்டும் என்பதுதான் தமிழக முதலமைச்சரின் நோக்கம். இதுபோன்ற தவறான கருத்துகளை கூறி மக்களை திசை திருப்பக் கூடாது. கோமியத்தை அந்த காலத்தில் இருந்து தெளித்துக் கொள்வதுதான் வழக்கம். அதை ஐஐடி இயக்குநர் குடிக்க கூறுகிறார். ஒரு ஐஐடி இயக்குநர் இது போன்ற கருத்தை கூறுவது ஏற்கக்கூடியதல்ல. இது போன்ற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிய செய்திகள் மூலமாக பத்திரிகையாளர்கள் நீங்கள் தான் பத்திரிகை மூலமாக வெளிக் கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
இரட்டை கொலை சம்பவம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சென்னை, ஜன.19- சென்னை பட்டாபிராமில் நடந்த இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பாக பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜீவால் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆயல்சேரியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இரட்டைமலை சீனிவாசன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் சனிக்கிழமை அன்று இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பம் தொடர்பாகவே ஜெகநாதனை காத்திருப்போர் பட்டி யலுக்கு மாற்றியுள்ளார். பட்டாபிராம் காவல் ஆய்வாளராக, திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜய ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புலி நக சங்கிலி அணிந்தவர் கைது
கோவை,ஜன.19- கோவையில் புலி நகத்தால் சங்கிலி செய்து அணிந்திருந்த தொழிலதிபரை கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பேசிய தொழிலதிபர் பாலகிருஷ்ணன், ஆந்திராவில் புலி நகத்தாலான செயினை வாங்கியதாக கூறியது வைரலானது. இதனைத்தொடர்ந்து பாலகிருஷ்ணன் வீட்டில் சோதனையிட்ட வனத்துறையினர், மான் கொம்புகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பாலகிருஷ்ணன் வீட்டில் இல்லாத நிலையில் வனத்துறை அலுவலகத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டார். பாலகிருஷ்ணனிடம் இருந்து பறிமுதல் செய்த மான் கொம்பு, புலி நகத்தை வனத்துறை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளது.
ஜன.23 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை,ஜன.19- தமிழகத்தில் ஜனவரி 23 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறு பாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜன.20) தென் மாவட்டங்களில் சில இடங்கள், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும். ஜனவரி 21, 22, 23 ஆகிய தேதி களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 24, 25 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதி களில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண வீக்கம் : கிழிந்து போகும் பொய்த் திரைகள்
தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள “குடும்ப நுகர்வு செலவின ஆய்வு 2023 -24” இன் படி மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவினம் அதிகரித்து இருப்பது நல்ல அறிகுறி தானே! என்று சிலர் கேட்கலாம். 2011 - 12 ஆம் ஆண்டிற்கு பின்னர் 11 ஆண்டுகள் கழித்து “நுகர்வோர் செலவின ஆய்வு” குறித்த வெளியிடப்படும் இரண்டாவது ஆண்டறிக்கையாகும் இது. ஆட்சியாளர் மகிழ்ச்சி இந்த அறிக்கையை இந்த முறை வெளியிடும் போது ஆட்சியாளர்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். காரணம், தனிநபர் சராசரி நுகர்வோர் செலவினம் (MPCE) 2022- 23 இல் ரூ 3773 ஆக இருந்தது. 2023 - 24 இல் ரூ 4122 ஆக கிராமப் புறங்களிலும், ரூ 6459 லிருந்து ரூ 6996 ஆக நகர்ப் உயர்ந்திருப்பதே. இதன் பொருள் கிராமப் புறங்களில் 9.25 சதவீதமும், நகர்ப்புறங்களில் 8.31 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது. ஆகவே மக்களின் நுகர்வு அதிகரித்து இருக்கிறது; பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அவர்களுக்கு போய் சேர்ந்திருக்கிறது என்று சித்தரிக்க ஆட்சியாளர்கள் முனையலாம். ஆனால் இந்த உயர்வுக்குள் ஒளிந்திருக்கிற ஒரு முக்கியமான அம்சத்தை நாம் காண தவறக் கூடாது. அதுவே பணவீக்கம். பணவீக்கம் கழித்தால் மேற்கண்ட நுகர்வு உயர்வு சதவீதத்தை பொதுவான நுகர்வோர் செலவின குறியீடு 6 சதவீதத்துடன் இணைத்தும், உணவுப் பொருள் பணவீக்க விகிதமான 9 சதவீதம் + என்பதோடு இணைத்தும் பார்த்தால்தான் உண்மையான நுகர்வில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அனேகமாக உயர்வேதும் இல்லை என்பது அம்பலமாகும். அதாவது நுகர்வு அப்படியே இருந்திருக்கிறது அல்லது குறைந்தி ருக்கிறது. ஆனால் நுகர்வுக்கான செலவினம் பண வீக்கத் தால் அதிகரித்து இருக்கிறது. அது தனிநபர் சராசரி மாதாந்திர நுகர்வு செலவினத்திலும் பிரதிபலித்திருக்கிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி - ஜனவரி 6 - 12, 2025 - க.சுவாமிநாதன்