states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக சில சுயநலங்களைக் கொண்டுள்ளது. அதனால் தான் மணிப்பூரை வன்முறை கொதிநிலையில் வைத்திருக்கவே ஆர்வமாக உள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் இருந்து பிரதமர் ஒருபோதும் தப்ப முடியாது. மணிப்பூரை எரிக்கும் தீக்குச்சி பாஜக தான். வேறு யாரும் இல்லை.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பைடன் மனைவிக்கு மோடி பரிசளித்த வைர மோதிரத்தின் விலையை  ஆர்டிஐயின் கீழ் வெளியிட மோடி அரசு மறுத்துவிட்டது. அமெரிக்காவுக்கு தங்களின் பொய்களை ஒத்துழைக்கச் சொல்ல மறந்துவிட்டது. பரிதாபம் வைர மோதிரத்தின் விலையை (ரூ.17 லட்சம்)  அமெரிக்கா வெளியிட்டு விட்டது.

அரசியல் சாசனத்தின் பாதுகாவலன் நீதித்துறை என்று நாம் சொல்கிறோம். அப்படி என்றால் நீதித்துறையின் பாதுகாவலன் யார்? என்ற கேள்வி எழுகிறது. நீதித்துறையின் பாதுகாவலன் நாட்டு மக்கள் தான்.

13.8 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அவர் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரமும் மிக வேகமான வளர்ச்சி கண்டது உண்மை தான்.