states

img

ஊழல் ஒழிப்பில் பாஜக அரசின் போலித்தனம் : 3 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாத லோக்பால் அறிக்கைகள்

ஊழல் ஒழிப்பில் பாஜக அரசின்  போலித்தனம் : 3 ஆண்டுகளாக  தாக்கல் செய்யப்படாத லோக்பால் அறிக்கைகள்

புதுதில்லி  ஊழலை விசாரிக்க உருவாக்கப் பட்ட லோக்பால் அமைப்பின்  அறிக்கைகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வில்லை.  இந்தியாவில்  பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், எம்.பி.க்கள், ஒன்றிய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் வகையில் அதிகாரத்துடன்  உருவாக்கப்பட்ட அமைப்பு தான் லோக்பால். லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013 இன் பணிகள் என்பது மக்கள் பிரதிநிதிகள், ஒன்றிய அரசின் அதிகாரிகள் மீதான ஊழல்  புகார்களைப் பெறுவது, அதன் மீது  விசாரணை நடத்துவது, தவறு செய்தவர் களின் மீது  நடவடிக்கை எடுப்பது, உரிய அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிப்பது, அதனை நாடாளுமன்றத்தின் மூலமாக பொதுமக்களுக்கு தெpuயப்படுத்துவது ஆகியவையே இவ்வமைப்பின் பணியாகும்.  அதிர்ச்சிக்குள்ளான கான்வில்கர் 2022-2023 முதல் 2024-2025 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான லோக்பால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலை யில் 2024 மார்ச் மாதம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பால் அமைப் பின்  தலைவராகப் பொறுப்பேற்றார். சட்டப்படி தாக்கல் செய்யப்பட வேண்டிய லோக்பால் ஆண்டு அறிக்கையை அவர் பார்க்க விரும்பிய போது 2022-23 ஆம் ஆண்டிற்கான அப்படி ஒரு ஆவணமே அங்கு இல்லை என்பதனைக் கண்டு அதிச்சிக்குள்ளாகியுள்ளார். லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டம், 2013-இன் பிரிவு 48-இன் படி, லோக்பால் செய்த பணிகளை அறிக்கையாக ஒவ்வோர் ஆண்டும் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பது லோக்பாலின் கடமையாகும். குடியரசுத் தலைவர் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய வேண்டும். குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை இந்தச் சூழலில் தான், அறிக்கை வெளியிடப் படாத ஆண்டுகளுக்கும் சேர்த்து நீதிபதி கான்வில்கர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி, 2022-23, 2023-24 ஆகிய இரண்டு ஆண்டுகளை யும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. அக்டோபர் 2024-க்குள் இந்த அறிக்கையை குடியரசுத் தலை வர் திரௌபதி முர்முவிடம் முறைப்படி வழங்க லோக்பால் அலுவலகம் அனுமதி கோரியது. குடியரசுத் தலைவரைச் சந்திக்க 2024, 2025 ஆகிய இரு ஆண்டுகளில் லோக்பால் அதி காரிகள் நான்கு முறை கடிதம் எழுதியுள்ளனர். பலமுறை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டனர். ஆனால், குடியரசுத் தலைவரின் வெளிநாட்டுப் பயணம், கோவில் பயணம், போர் விமானத்தில் பயணிப்பது என்ற அவரது பரபரப்பான கால அட்டவணை கார ணமாக  அதிகாரிகளுடன் அவர் சந்திக்க வில்லை. இதற்கிடையில், 2024-25 ஆம் ஆண்டிற்கான அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.  அஞ்சலில் அனுப்பப்பட்ட அறிக்கைகள் பல நினைவூட்டல் கடிதங்களுக்குப் பிறகும்  குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் இருந்து பதில் கிடைக்காததால், லோக்பால் அமர்வு மூன்று ஆண்டுகளின் அறிக்கைகளையும் குடி யரசுத் தலைவருக்கு 2025  நவம்பர் 18 அன்று அறிக்கைகளை தபால் மூலம்  அனுப்பினர். குடியரசுத் தலைவர் அலுவலகம் இந்த அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டதாக ஒப்புக் கொண்டு, அவற்றை பிரதமர் அலுவலகத்தின் கீழ் உள்ள பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு (DoPT) அனுப்பியது. எனினும் டிசம்பர் 2025-இல் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடரிலும் இந்த அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தத்தக்கது. இதனால் ஊழலை ஒழிப்பேன் என்று கூறிய பாஜகவும் மோடியும் ஏன் மக்களுக்கு பதி லளிக்க வேண்டிய லோக்பால் அறிக்கை யை மறைக்க வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக ஒரு அமைப்பு பல  முறை முயற்சி செய்திருந்தும் அறிக்கையை  பெறுவதற்கு முன்வராத குடியரசுத்தலை வருக்கு தபால் மூலமாகத்தான் அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டிய சூழல் உள்ளது என்ற நிலையானது இந்தியாவில் மோச மடைந்துள்ள அரசுத்துறைகளின் அலட்சி யத்தையும் அக்கறையின்மையையும் பகிரங்க மாக வெளிப்படுத்துகிறது.