பாட்னா பீகாரில் பாஜகவை விட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மிகப்பெரியது. ஆனால் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் வெறும் 48 தொகுதி களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் பீகாரில் பெரியளவு பின்புலம் இல்லாத பாஜகவோ 84 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெ டுத்தது. இது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விட ஐக்கிய ஜனதா தளத்திற்கு தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் பச்சோந்தி குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களைப் போல பீகாரிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிடுமோ? என்ற அச்சத்தில் 2022ஆம் ஆண்டு எதிர்க் கட்சிகளின் ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகளின் மகா கூட்டணிக்கு தாவி நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்றார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேஜஸ்வி துணை முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வரான தேஜஸ்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்கள் நலப்பணியில் பிரம்மாண்டமாக வேலை செய்தார். தேஜஸ்விக்கு மாநிலம் முழுவதும் செல்வாக்கு உயர்ந்தது. தேஜஸ்வி தன்னை விட வளர்ந்து விடுவாரோ என்ற அச்சத்தில் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பச்சோந்தி அரசியல் நாயகன் பட்டத்துடன் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்து நிதிஷ் குமார் முதல்வரானார். துணை முதல்வர்களாக பாஜக வின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா உள்ளனர்.
பாஜகவிற்கு நிதிஷ் குமார் செக்...
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலு க்கு இன்னும் 10 மாதங்கள் இருந்தா லும் தற்போதே பீகார் பாஜக கூட்ட ணிக்குள் தொகுதி தொடர்பாக மோதல் துவங்கியுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் கட்சி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 140 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கண்டிப்பாக போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது. ஆனால் பாஜகவோ 150 தொகுதிகளுக்கு கீழ் போட்டியிட மாட்டோம் என கூறியுள்ளது. பீகாரில் மொத்தமே 243 தொகுதிகளே உள்ள நிலை யில், இரண்டு கட்சிகளும் 65% தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முட்டி மோதி வருகின்றன. இந்த மோதல் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளி யாகின.
கலக்கத்தில் பாஜக...
இதனிடையே கடந்த வாரம் பீகார் புதிய ஆளுநராக ஆரிப் கான் பதவியேற்றார். இந்த நிகழ்வின் போது ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வியுடன் நிதிஷ் குமார் தோளில் கைபோட்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டனர். இதனை கண்ட துணை முதல்வர்களான பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா விழா மேடையிலேயே கடும் கோபத்தை வெளிப்படுத்தி னர். மேலும் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்,”நிதிஷ் குமாருக்கான கூட்டணி கதவு திறந்தே உள்ளது” என கூறினார். இதனால் நிதிஷ் குமார் மீண்டும் எதிர்க்கட்சி களின் மகா கூட்டணிக்கு இணை யப்போகிறார் என இந்தி மற்றும் ஒரு சில ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் நிதிஷ் குமார், “முன்பு ஒருமுறை தவறு இழைத்து விட்டேன். அதனால் மீண்டும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியு டன் கூட்டணி வைக்க வாய்ப்பில் லை” என்று கூறினார். ஆனால் சட்ட மன்ற தேர்தல் முடிவை பொறுத்து நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணி நிலைப்பாட்டை மாற்றும் சூழல் ஏற்படலாம் என அரசியல் வல்லு நர்கள் கூறியுள்ளனர். இந்த தக வலால் பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஷிண்டேவை போல நிதிஷ் குமாரையும் ஒடுக்க பாஜக திட்டம்
மகாராஷ்டிராவில் கடந்த 2022ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உடைத்து, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க சிவசே னாவை இரண்டாக உடைத்தவர் ஏக்நாத் ஷிண்டே. இதற்காக ஷிண்டேவிற்கு முதல்வர் பதவி கொடுத்தது பாஜக. துணை முதல்வ ராக பாஜக மூத்த தலைவர் பட்னா விஸ் இருந்தார். சமீபத்தில் நிறைவு பெற்ற சட்டமன்ற தேர்தலில் ஏக்நாத் ஷிண்டேவை குறைந்த தொகுதி களில் போட்டியிட வைத்து, அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சிக்கு தான் முதல்வர் பதவி என ஷிண்டேவிடம் இருந்து முதல் வர் பதவியை பறித்தது பாஜக. இதனால் தற்போது பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் உள்ளார். மேலும் ஷிண்டேவை ஒடுக்கும் முயற்சியில் அவருக்கும், அவரது கட்சியினருக்கும் அமைச்சரவை யில் அதிகாரத்தை குறைத்தது பாஜக. கிட்டத்தட்ட ஷிண்டேவை பாஜக டம்மியாக்கிவிட்டது. இதே முறையில் நிதிஷ் குமாருக்கும் குறைந்த சீட்களை கொடுத்து, பீகாரின் முதல்வர் பதவியை கைப் பற்ற பாஜக கணக்கு போட்டு வருகிறது.
மோடி அரசுக்கே செக் வைக்க திட்டம் வகுக்கும் நிதிஷ்
இந்நிலையில் எங்கள் கட்சி 140 தொகுதிகளுக்கு மேல் கண்டிப் பாக போட்டியிடும். அதற்கு கீழ் குறைந்த தொகுதிகளில் போட்டி யிட வாய்ப்பில்லை என நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளிப்படையாக அறிவித்து விட்டது. இதற்கு விட்டுக் கொடுக்க வில்லை என்றால் பாஜக கூட்ட ணியை விட்டு விலக ஐக்கிய ஜனதாதள கட்சி திட்டமிட்டுள்ள தாக செய்திகள் வெளியாகி யுள்ளன. பாஜக கூட்டணியை விட்டு ஐக்கிய ஜனதாதளம் கட்சி விலகினால் மத்தியில் மோடி அரசு கவிழும் சூழல் ஏற்படும். கார ணம் ஐக்கிய ஜனதாதளம் கட்சி யின் 12 தொகுதிகளை வைத்தே மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். பீகாரில் அரசியல் சூழல் இவ் வாறு உள்ள நிலையில், கிங் மேக்க ராக நிதிஷ் குமார் மத்தியிலும், பீகார் மாநிலத்திலும் பாஜக கூட்ட ணிக்குள் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.