அசாமில் பாஜக கூட்டணி முறிவு
அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியில் யுபிபிஎல் (ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்) மற்றும் பிபிஎப் (போடோலாந்து மக்கள் முன்னணி) ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அசாமில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஆளும் பாஜக கூட்டணியில் தொகுதி களை பகிர்ந்து கொள்வதில் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக போடோலாந்து பகுதியில் பாஜக கூட்டணி உடைந் துள்ளது. போடோலாந்து பகுதியில் உள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளில் தங்களுக்கு குறைந்தது 7 இடங்களாவது ஒதுக்க வேண்டும் என்று யுபிபிஎல் கட்சி வலி யுறுத்தி வருவது கூட்டணியில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆனால் போடோலாந்து பிராந்தியத்தில் பாஜக தனித்து களம் காண உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்,“போடோலாந்து பிராந்தி யத்தில் உள்ள தங்லா, கோரேஸ்வர், தமுல்பூர் உள்ளிட்ட 4 முதல் 6 தொகுதி களில் பாஜக தனித்து வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. கூட்டணியில் உள்ள பிபிஎப் கட்சி 15 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட சிக்னல் கொடுத்திருந்த நிலையில், பாஜகவும் தனது பலத்தை நிரூபிக்க களம் இறங்கி யுள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாலும், கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறி யுள்ளார். இந்த முடிவால் பாஜக கூட்ட ணிக் கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன. போடோலாந்து போடோலாந்து பகுதி என்பது அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா நதியின் வடக்குக் கரையில், பூடான் மற்றும் மேற்கு வங்க எல்லையை ஒட்டியுள்ள பகுதி ஆகும். போடோலாந்து பகுதியில் கோக்ரஜார், சிராங், பக்ஸா, உதல்குரி ஆகிய நான்கு மாவட்டங்கள் உள்ளன.