states

img

விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறிப்பதே பாஜகவின் நோக்கம்

விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறிப்பதே பாஜகவின் நோக்கம்

புதுதில்லி “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்பது, இந்தி யச் சந்தைகளை அமெரிக்க விவசா யப் பொருட்களுக்காக திறந்துவிடு வது ஆகும். இது விவசாயத்தைச் சார்ந்துள்ள நாட்டின் 70% மக்க ளுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். பாஜகவினரும் அவர்களின் கூட்டாளிகளும் சுதந்திரத்திற்கு முன்பும் அந்நியர்களின் முகவர்க ளாக இருந்தனர், இன்றும் அப்ப டியே தான் இருக்கிறார்கள். சுய சார்பு, சுதேசி பற்றி பேசும் பாஜகவி னரும் அவர்களது கூட்டாளிகளும், நாட்டின் பொருளாதாரத்திற்குத் துரோகம் செய்ய எவ்வளவு கமிஷன் வாங்கினார்கள் என் பதை மக்களிடம் தெளிவாக விளக்க வேண்டும். வெளிநாடுகளின் ஒப்பந்தங்கள் விவசாயிகள் மட்டு மின்றி, நடுத்தர வர்க்கத்தினரை யும் கடுமையாகப் பாதிக்கும். ஏனெனில், இது உணவு தானி யங்கள் மற்றும் விவசாயப் பொ ருட்களில் லாபவெறி கொண்ட புதிய இடைத்தரகர்களை உரு வாக்கும். இதனால் உண்ணும் உணவுப் பொருட்கள் அனைத்தும் மேலும் ஜெட் வேகத்தில் விலையேறும். அதோடு, பாஜக இந்த நிறுவ னங்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கும், இதனால் விலைகள் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும். கிட்டத்தட்ட விவசாயி களின் சாகுபடி மற்றும் வருமானம் வெகுவாகக் குறைந்துவிடும். இறு தியில் விவசாயிகள் வேறு வழி யின்றித் தங்களின் நிலங்களை பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள் ளப்படுவார்கள். நிலங்களைக் கையகப்படுத்துவதே பாஜக மற்றும் அவர்களது கூட்டாளிக ளின் இறுதி நோக்கம்” என அவர் குற்றம்சாட்டினார்.