states

img

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2ஆம் கட்டத்தில் 67 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வாக்குப்பதிவு

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2ஆம் கட்டத்தில் 67 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வாக்குப்பதிவு

பாட்னா 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநி லத்தில் நவம்பர் 6ஆம்  தேதி 121 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து இரண்டாம் கட்ட மாக 122 தொகுதிகளில் செவ்  வாய்க்கிழமை அன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. 122 தொகுதி களில் மொத்தம் 1,302 பேர் களத்தில்  இருந்தனர். இதில் 136 பேர் பெண்  கள் ஆவர். வாக்குப்பதிவு நடை பெறும் 20 மாவட்டங்களில் 3.7 கோடி  வாக்காளர்கள் இருந்தனர். இந்நிலையில், செவ்வாய்க் கிழமை காலை 7 மணிக்கு வாக்  குப்பதிவு தொடங்கியது. அதி காலை முதலே வாக்குச்சாவடி களில் குவிந்த மக்கள் ஆர்வத்து டன் வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. சில இடங்களில் 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. பல தொகுதிகளில் 6  மணிக்கு மேலாக மக்கள் வரிசை யில் நின்றதால் டோக்கன் வழங்கப்  பட்டது. மாலை 5 மணி நிலவரப்படி  பீகார் இரண்டாம் கட்டத் தேர்தலில்  67.14% வாக்குகள் பதிவாகி இருந்தன. 2 கட்டமாக நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதி வான வாக்குகள் நவம்பர் 14 ஆம்  தேதி எண்ணப்பட உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.