states

திடீரென வெளுத்து வாங்கிய மழை மிதக்கும் பெங்களூரு

திடீரென வெளுத்து வாங்கிய மழை மிதக்கும் பெங்களூரு

கர்நாடகாவில் அடுத்த 2 நாட்க ளுக்கு மிதமான அளவில் கன மழை பெய்யும் என வெள்ளிக் கிழமை அன்று வானிலை அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் எதிர்பாராவித மாக மிதமான கனமழை விட அதீத அள விலான கனமழை கொட்டித் தீர்த்தது. மற்ற பகுதிகளை விட கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் சனிக்கிழமை (மார்ச் 22) அன்று காற்றுடன் கனமழை புரட்டியெடுத்தது.  இந்த கனமழையால் பெங்களூரு நகரின் பெரும்பாலான பகுதிகள் குளம் போல் மாறின. மரங்கள் மற்றும் மரக் கிளைகள் முறிந்து விழுந்த சம்பவங்க ளும் ஆங்காங்கே நிகழந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. ஞாயிறன்றும் நிலைமை சீராக வில்லை என செய்திகள் வெளியாகி யுள்ளன.  குறிப்பாக சனிக்கிழமை அன்று மோசமான வானிலை காரணமாக பெங்க ளூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய சுமார் 10 விமானங்கள் சென் னைக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் நாடு முழுவதும் விமான போக்குவரத்தும் பாதிக்கபட்டது. பெங்களூருவின் புலகேசி நகரில் மரம் விழுந்ததில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.