states

குக்கி-சோ கவுன்சில் தலைவரை கொல்ல முயற்சி மணிப்பூரில் டயர்களை எரித்து போராட்டம்

குக்கி-சோ கவுன்சில் தலைவரை கொல்ல முயற்சி மணிப்பூரில் டயர்களை எரித்து போராட்டம்

மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் நகரில் உள்ள குக்கி-சோ கவுன் சில் தலைவர் எச்.தாங்லெட் வீட்டிற்குள் ஞாயிறன்று இரவு ஒரு கும்பல் அத்துமீறி நுழைய முயன்றது. இந்த கும்பல்  எச்.தாங்லெட்டை கொல்ல அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டது. ஆனால் குக்கி-சோ கவுன்சிலின் ஆயுதம் ஏந்திய குழு  வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, அந்த கும்பலை விரட்டியது. இந்த தகவல் மாநிலம் முழுவதும் வேகமாக பரவியதையடுத்து, குக்கி சமூக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். குறிப்பாக, சுராசந்த்பூர் நகரு க்கு அருகிலுள்ள தூய்பாங் பகுதியில் டயர்களை எரித்து குக்கி சமூக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாது காப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டு களைப் பயன்படுத்தி போராட்டத்தை அப்புறப்படுத்தினர். தோல்வி பாஜகவின் இழிவான அரசியலால் தான் மணிப்பூரில் குக்கி - மெய்டெய் இடையேயான மோதல் சம்பவங்கள் வன்முறையாக காட்சி அளிக்கின்றன. சனியன்று (மார்ச் 21) மணிப்பூர் பாஜக முதலமைச்சர் யும்நாம் கெம்சந்த் சிங், குக்கி-சோ கவுன்சில் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாநி லத்தில் அமைதியை நிலைநாட்ட இந்த  முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பாஜக பெருமையாகக் கூறியது. இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற 24 மணி நேரத்தில் குக்கி-சோ கவுன்சில் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடும் அதிர்ச்சியையும் பதற் றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.