states

img

பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிப்பு தேர்தலுக்காக பீகாருக்கு தாராளம்

2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழந்தது. தற்போது மோடி 3ஆவது முறையாக பிரதமர் இருக்கையில் அமர்ந்து இருப்ப தற்கு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளே முக்கிய காரணம் ஆகும். இரு கட்சிகளில் ஏதா வது ஒன்று தேசிய ஜனநாயகக் கூட்ட ணிக்கான ஆதரவை வாபஸ் பெற்றால் மோடி ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற சூழல்  உள்ளது. இதனால் இரு கட்சிகள் ஆளும்  மாநிலங்களுக்கு (பீகார் -  ஐக்கிய ஜனதா  தளம், ஆந்திரா - தெலுங்கு தேசம்) ஒன்றிய பட்ஜெட்டில் கடந்த ஆண்டு முதல் சலுகை மற்றும் திட்டங்களை மோடி அரசு வாரி இறைத்து ஆட்சியை காப்பாற்றி வருகிறது. இந்நிலையில், வழக்கம் போல 2025-2026ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டிலும் ஆந்திரா, பீகார் மாநி லங்களுக்கு சலுகை மற்றும் திட்டங் களை அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள  பீகார் மாநிலத்திற்கு புதிய விமான  நிலையம், பாட்னா ஐஐடி விரிவாக்கம்,  தொழிற்சாலைகள், வேளாண் திட்டங் கள் என ஏராளமான திட்டங்களை மோடி அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு கடந்த பட்ஜெட் போல் இல்லாமல் உதிரியான அளவில்  மட்டுமே ஒரு சில திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.  இதனால் இது பீகாருக்கான பட்ஜெட்  என எதிர்க்கட்சிகள் மோடி அரசை கடுமை யாகச் சாடியுள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,”பீகாருக்கு இந்த  ஆண்டு தேர்தல் வருவதால் பட்ஜெட்டில்  பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி யின் மற்றொரு தூணாக இருக்கும் ஆந்திரா ஏன் இவ்வளவு கொடூரமாக புறக் கணிக்கப்பட்டிருக்கிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.