states

img

மீண்டும் “ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்” பரவல் அசாமில் பன்றி இறைச்சி விற்பனைக்குத் தடை

மீண்டும் “ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்” பரவல் அசாமில் பன்றி இறைச்சி விற்பனைக்குத் தடை

கவுகாத்தி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பன்றி இறைச்சி மிக முக்கிய உணவாகும். இத்தகைய சூழ லில் அம்மாநிலத்தில் மீண்டும் “ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்” வேகமாக பரவி வருகிறது.  இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 297 பகு திகளில் ஆப்பிரிக்க பன்றிக்  காய்ச்சல் பரவல் கண்டறியப்பட் டுள்ளது. குறிப்பாக அக்டோபர் மாதத்தில் மட்டும் 84 பகுதிகள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளன. இதனால் அசாம் மாநி லத்தின் 7 மாவட்டங்களில் பன்றி இறைச்சி விற்பனைக்கு முழுமை யான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அசாம் மாநில கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அசாம் மாநிலத்தில், பன்றி வளர்ப்புத் தொழிலை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. ஜனவரி 2025 முதல் மாநிலம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு நிகழ்வுகள் அச் சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகின்றன. தற்போது கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள தேமாஜி, கம்ரூப், லக்கிம்பூர், சிவசாகர், தர் ராங், ஜோர்ஹாட் மற்றும் திப்ரூகர் ஆகிய 7 மாவட்டங்களில் பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை யும், பன்றி வளர்க்க கட்டுப்பாடும் விதிக்கப்படுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது. 14,000 பன்றிகள் கொல்லப்பட்டன அசாம் மாநிலத்தில் முதன் முத லாக 2020ஆம் ஆண்டு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்ட றியப்பட்டது. 5 ஆண்டு இடைவெளி யில் தற்போது பெரியளவில் பன்றிக் காய்ச்சல் பரவல் மற்றும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப் பாக இந்த ஆண்டு தொடக்கத்தி லிருந்து அசாம் மாநிலம் முழு வதும் பன்றிக் காய்ச்சலால் பாதிக் கப்பட்ட 14,000-க்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.