states

img

ஸ்கேன் இந்தியா

அடிதடி

கர்நாடகத்தில் எதிர்க்கட்சிக் கூட்டணியான பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் அடிதடி தொடர்ந்து நடந்து வருகிறது. பாஜக வின் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா வின் கட்டுப்பாட்டுக்குள்தான் இன்னும் கட்சி இருக்கி றது. அவரது மகன் விஜயேந்திராதான் தற்போது மாநிலத் தலைவராக இருக்கிறார். எங்களுக்கு தேவ கவுடா தலைமையிலான ஜனதா தளத்தின் துணை தேவையில்லை என்று இருவரும் பேசி வருகிறார் கள். ஜனதா தளக்கட்சியினர் இதுகுறித்து தேவே கவு டாவிடமும், குமாரசாமியிடமும் அளித்த புகார்கள் கண்டுகொள்ளப்படவில்லை. அமித் ஷா சொல்வது தான் இறுதி முடிவு என்கிறார் குமாரசாமி. ஆனால், களத்தில் பெரும் சிக்கல்கள் உருவாகின்றன என்று அவரது கட்சிக்காரர்கள் குமுறுகிறார்கள். வழக்குக ளில் இருந்து தப்பிக்கவே குமாரசாமி கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்றும் சில கட்சிக் காரர்கள் முணங்குகிறார்கள்.

பிடிவாதம்'

மாட்டுக்கறி உத்தரப்பிரதேசத்தில் இருந்துதான் அதிகமாக ஏற்றுமதி ஆகிறது என்று கருத்து தெரிவித்த தால் அவிமுக்தேஸ்வரானந்த் என்ற சாமியா ரை உத்தரப்பிரதேச பாஜக அரசு புறக்கணித்தது. மகா மேளாவில் அவர் தனியாகத்தான் போய்க்  குளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் சொன் னார்கள். தன்னை அவமானப்படுத்திவிட்டார் கள் என்று அவர் புகார் கூறினார். உயர்சாதியி னரிடம் மன்னிப்புக் கேட்பதாக துணை முதல மைச்சர் சொன்னார். ஆனால், தற்போது அவரை மீண்டும் குறி வைத்திருக்கிறார்கள். அவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பாக தரப்பட்டி ருந்த ஒரு புகாரின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளார்கள். கட்சிக்குள் ஒரு பகுதி யில் அவருக்கு ஆதரவாக இருந்தாலும், முதல மைச்சர் தலைமையிலான அணியினர் பிடி வாதமாக இருக்கிறார்கள்.

அச்சம்

மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னாள் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வுக்குழு (சிபிஐ) விசாரிக்கும் என்று அறிவித்துள்ளார்கள். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சரத் பவார் குடும்பத்தைச் சேர்ந்த ரோகித் பவார் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். மத்தியப் புலனாய்வுக்குழு விசாரணை தேவையில்லை என்று பாஜக தட்டிக் கழித்தது. ஆனால், தற்போது பொது மக்கள் மத்தி யில் ரோகித் பவாரின் கோரிக்கைக்கு ஆதரவான கருத்து நிலவுவதால், மாநில அரசு வேறு வழியின்றி இறங்கி வந்துள்ளது. குடும்பத்தினர் மத்தியில் ஒற்றுமை வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. அத்தகைய ஒற்றுமை பலமான தேசிய வாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கி விடும் என பாஜக அச்சப்படுகிறது.

கசிவு

பாஜக ஆளும் மாநிலங்களில் குடிநீர்க் கசிவு, கழிவுநீர் சேருவது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்கின்றன. தில்லியில் இந்தப் பிரச்சனை கடுமையாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அப்போது மறுத்து வந்த ஆளும் பாஜகவினர், தற்போது அதிகாரப்பூர்வ மான தகவல்களைக் கண்டு வாய் மூடிப் போயிருக்கிறார்கள். தில்லி மாநில பொ துப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் சாகிப் சிங் வெளியிட்டுள்ள புள்ளிவிப ரத்தின்படி, 40 விழுக்காடு குடிநீர் கசிவால் வீணாகப் போகிறது. இந்த வீணாகப் போகும் பிரச்சனையைத் தீர்த்து விட்டாலே,  இருக்கும் தண்ணீரை வைத்து  தில்லியில் அனைவருக்கும் போதுமான தண்ணீரை வழங்கிவிட முடியும் என்று அவர் கூறியுள்ளார். இதைத்தானே நாங்கள் சொன்னோம் என்று எதிர்க்கட்சி கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளன. பாஜகவினர் கைகளைப் பிசைந்த வண்ணம் உள்ளனர்.