states

img

உ.பி., பாஜக அரசு அடாவடி - சம்பல் பகுதியில் இருந்து முஸ்லிம் மக்களை விரட்ட தனி காவல் நிலையம்

லக்னோ சம்பல் பகுதியில் இருந்து முஸ்லிம் மக்களை விரட்ட தனி காவல்நிலையம் அமைக்கும் வேலையை துவங்கியுள்ளது உத்தரப் பிரதேச பாஜக அரசு.  பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சம்பலில் உள்ளது ஷாஹி ஜமா  மசூதி. முகலாய மன்னர் பாபர் கால ஆட்சியின் போது 1526இல் கட்டப்பட்ட இந்த ஷாஹி ஜமா மசூதி, இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டது எனக் கூறி இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் அம் மாநில சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் உத்த ரப்பிரதேச அரசு அதிகாரிகள் குழு நவம்பர் 19 அன்று மசூதியில் ஆய்வு நடத்த வந்தனர். இந்த ஆய்வுக்கு முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லிம் மக்களின் எதிர்ப்பை சாதகமாக பயன்படுத்திய பாஜக மற்றும் உத்தரப்பிர தேச காவல்துறையினர் வன்முறையை தூண்டினர். இந்த வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். வன்முறை க்கு பிறகு சம்பல் பகுதியில் நுழைய வெளியாட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால், அப்பகுதி தற்போது தனித் தீவாக மாறியுள்ளது.  இந்நிலையில், ஷாஹி ஜமா மசூதி க்கு எதிரே வயல் பகுதியில் தனியாக ஒரு புறக்காவல்நிலையம் கட்டும் பணி யை தொடங்கியுள்ளது உத்தரப்பிரதேச பாஜக அரசு. புறக்காவல்நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை சனிக் கிழமை அன்று நடைபெற்றது.  சம்பலில் ஏற்கனவே காவல்நிலை யம் இருக்கும் பொழுது மசூதி அருகே எதற்கு தனியாக புறக்காவல்நிலையம் என அப்பகுதி முஸ்லிம் மக்கள், எதிர் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர். சம்பலில் இருந்து முஸ்லிம் மக்களை விரட்டவே அங்கு புறக் காவல்நிலையம் அமைக்கப்படுகிறது என உள்ளூர் முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.