கேரளாவின் நீண்டகால தேவைகள் எதை யும் கண்டுகொள்ளாத ஒன்றிய பட்ஜெட், மாநிலத்தையே முற்றிலுமாக புறக்கணித்துள்ள தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”கேரளாவின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. நடுத்தர வகுப்பின ருக்கான பட்ஜெட் என்று அழைக்கப்பட்டாலும், நாட்டில் இரண்டு சதவிகித வருமான வரி மட்டுமே செலுத்துபவர்களை திருப்திப்படுத்த வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. தில்லி தேர்தலை கருத்தில் கொண்டு வரி குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. கடந்த பட்ஜெட்டைப் போலவே, இந்த பட்ஜெட்டிலும் பீகார் ஆறு முறை குறிப்பிடப்பட் டுள்ளது. பட்ஜெட் உரையில் ஆந்திராவை ஏன் குறிப்பிடவில்லை என்று ஒருவர் யோசிக்கலாம். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு பிரதமர் ஆந்திராவுக்குச் சென்று பல்வேறு திட்டங்களை அறிவித்தார். எனவே, இந்த முறை முற்றிலும் பீகாரின் முறை. இதைப் பார்த்தால் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு குறுகிய அரசியல் மனப்பான்மை பிரதிபலிக்கிறது என்பது தெளி வாகும். கேரளம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரூ.24,000 கோடி சிறப்புப் பொரு ளாதார தொகுப்பு உட்பட எந்த திட்டங்களும் ஒன்றிய பட்ஜெட்டில் சேர்க்கப்படவில்லை. வயநாடு நிவாரணத்திற்காக ரூ.2,000 கோடி தொகுப்பு, வனவிலங்கு பிரச்சனையை தீர்க்க ரூ.1,000 கோடி தொகுப்பு, நாட்டின் மிக முக்கியமான துறைமுகமாக மாறி வரும் விழிஞ்ஞத்திற்கு ரூ.5,000 கோடி சிறப்பு தொகுப்பு ஆகியவற்றை கேரளம் கோரியிருந்தது. இவற்றில் எதையும் வழங்க ஒன்றிய அரசு தயா ராகவில்லை. ஒன்றிய அரசு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையிலும், இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ள சூழ்நிலையிலும், கேரளம் சிறப்பு நிவார ணத் தொகுப்பை கோரியுள்ளது” என அவர் கூறினார்.