மேற்குவங்கத்தில் கொடூரம் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
பாஜக ஆளும் மாநிலங்ககளைப் போலவே, திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்திலும் பெண்கள், சிறுமி களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் தாராகேஷ்வரர் ரயில் நிலையத்தின் அருகே சாலையோரத்தில் பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி யை சனியன்று நள்ளிரவில் காண வில்லை. பாட்டி மற்றும் ரயில் நிலை யத்தில் இருந்தவர்கள் சிறுமியை தேடிய பொழுது, அருகில் இருந்த வாய்க்காலில் சிறுமி ஆடைகளின்றி நிர்வாண நிலை யில் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார். கவலைக்கிடம் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுமி பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட் டது தெரிய வந்தது. அதே போல சிறுமி யின் கன்னத்தில் கடித்த காயங்களும் காணப்பட்டது. ரத்தப்போக்கு தொடர்ந்த நிலையில் சிறுமி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூரச் சம்ப வத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.