states

img

மணிப்பூரில் கொடூரம் - 3 வயது குழந்தையின் கண்ணை குறிவைத்து துப்பாக்கிச் சூடு

வன்முறைக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 260ஆக உயர்வு

பாஜகவின் இழிவான அர சியலால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மணிப்பூர் கடந்த 18 மாதங்க ளாக வன்முறையால் பற்றி எரிந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்நாட்டு போருக்கு இணையாக வன்முறைச்  சம்பவங்கள் நீடித்து வருகின்றன. வன்முறைக்கு உயிரி ழந்தவர்களின் மொத்த எண் க்கை 260ஆக உயர்ந்துள்ளது.

சிறுவனின் கண்ணில் துப்பாக்கிக் குண்டு

2 வாரத்திற்கு முன்பு ஜிரிபாம் ஆற்றில் 6 பேர் சடலங்களாக மீட்கப் பட்டனர். பலியான 6 பேரும் மெய்டெய் பிரிவைச் சேர்ந்தவர் கள் ஆவர். இத்தகைய சூழலில் உயிரிழந்த 6 பேரில் மூவரின் உடற்கூறாய்வு அறிக்கை வெளி யாகியுள்ளது. அதில் ராணி தேவி (60), அவரது மகள் லைஷ்ராம் ஹைதோம்பி தேவி (25) மற்றும் 3 வயது பேரன் லைஷ்ராம் சிங்கின் கன்பா சிங் ஆகியோரின் உடற் கூறாய்வில், மூவரும் கொடூர மான முறையில் கொல்லப்பட்ட தாக அறிக்கை கூறுகிறது. குறிப் பாக 3 வயது சிறுவனின் வலது கண்ணை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், சிறுவனின் மண்டை ஓட்டில் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவனின் உடலில் காயங்கள், மார்பு முறிவுகள், மணிக்கட்டுகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் வெட்டுக்காயங்கள் இருந்ததாக பதைபதைக்கும் வகையில் உடற் கூறாய்வு முடிவுகள் வெளியாகி யுள்ளன. 3 வயது குழந்தையை துன்புறுத்தி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதே போன்று ராணி தேவி, ஹைதோம்பி தேவியின் உடல்முழுவதும் வெட்டுக்காயங் கள் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

வன்முறை  தீவிரமடைய வாய்ப்பு

ராணி தேவியின் மூத்த மகள் டெலிம் தேவி (31), டெலிம் தேவி யின் மகள் தஜ்மான்பி தேவி (8) மற்றும் ஹைதோம்பியின் 8 மாத மகன் லைஷ்ராம் லங்காம்பா சிங் ஆகியோரின் உடற்கூறாய்வு அறிக் கையை மணிப்பூர் அரசு இன்னும் வெளியிடவில்லை. வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதால் உடற் கூறாய்வு அறிக்கை வெளியிடப் படவில்லை என மாநில பாஜக அரசு கூறியுள்ளது. இந்த வழக்கு விசார ணையை என்ஐஏ ஏற்றுள்ளது. 7 நாட்களுக்குள் கைது செய்யா விட்டால் மாநிலம் முழுவதும் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம் என மெய்டெய் அமைப்புகள் எச்ச ரித்துள்ளன. இதனால் மணிப்பூரில் வன்முறை தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

குக்கி பழங்குடியினரின் உடற்கூறாய்வு முடிவுகள் எங்கே?

கடந்த நவம்பர் 11ஆம் தேதி ஜிரிபாம் நிவாரண முகாமுக்கு அருகே சிஆர்பிஎப் பாதுகாப்புப் படையினர் குக்கி பழங்குடி பிரி வைச் சேர்ந்த 11 பேரை துப்பாக் கியால் சுட்டுக்கொன்றனர். இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட 11 குக்கி பழங்குடியினரின் உடற் கூறாய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. உடற் கூறாய்வு  அறிக்கை கிடைக்கா மல் தகனம் செய்ய மாட்டோம் என குக்கி பழங்குடியினர் அமைப்புகள் காலி சவப்பெட்டிகளுடன் போ ராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக மலை மாவட்டங்களில் பதற்றம் நீடித்து வருகிறது. விவசாயிகள் மீது தாக்குதல் ஞாயிறன்று மாலை மணிப்பூர் மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்தன. குறிப் பாக இம்பாலின் கிழக்கில் வயல்க ளில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எல் லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) விரைந்து செயல்பட்டு விவ சாயிகளை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் காரணமாக வயல் வேலைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என எல்லைப் பாதுகாப் புப் படையினர் உத்தரவிட்டுள் ளனர்.

அசாமில் இருந்து உதவியா?

தற்போதைய சூழ்நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் மட்டும் மிக மோசமான அளவில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஜிரிபாம் மாவட்டம் பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் எல்லை அருகே உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களிடமி ருந்த துப்பாக்கி உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் அடங்கிய கிடங்கை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.  ஆனால் வழக்கம் போல ஜிரிபாம் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. ஜிரிபாம் மாவட்டத்தில் நிகழும் வன்முறைக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கிடைக்கும் உதவியே காரணம் என செய்திகள் வெளியாகி யுள்ளன. அசாம் மாநிலத்திலும் பாஜக தான் ஆட்சி செய்து வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.