ஆந்திராவில் கோர விபத்து பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத் தில் பத்ராசலம் கோவிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த தனியார் பேருந்து, வெள்ளியன்று அதிகாலை 4 மணிளவில் பத்ராசலம் - சிந்தூர் இடையே துளசிபகாலு என்ற கிராமத்துக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் 33 பயணிகள் உட்பட 35 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் பத்ராசலத்தில் உள்ள மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அல்லூரி சீதாராமராஜு மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஓட்டு நர் அதிவேகமாக பேருந்தை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என காவல்துறை யின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நிவாரணம் விபத்தில் உறவினர் மற்றும் சொந்த ங்களை இழந்த குடும்பத்தினருக்கு பிர தமர் மோடி, ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தின ருக்கு ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர் களுக்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்கப் படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
