குஜராத்தின் சியாசத் நகரில் 8,000 முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு
தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் பாஜக அரசு அடாவடி
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சியாசத் நகரில் 8,000 முஸ்லிம் மக்களின் திடீரென வீடுகள் இடித்து தரைமட்டக்கப்பட்டுள்ளது. வீடு கள் இடிக்கப்பட்டதற்கு தெளிவான காரணங்கள் எதுவும் அரசு கூற வில்லை. ஆனால் “தேசப் பாது காப்பு நடவடிக்கை” என்ற ஒற்றை வரியில் இந்த அராஜகம் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் மூலம் கூறிய தாக செய்திகள் வெளியகியுள்ளன. வங்கதேசத்தினரை குறிவைத்து இடிப்பா? சியாசத் நகரில் வங்கதேசத் தில் இருந்து முற்காலத்தில் புலம் பெயர்ந்த 1,200 முதல் 1,500 குடும் பங்கள் வசித்து வந்தன. ஆனால் அவர்களில் 90% பேர் இந்திய குடி மக்களாக மாறிவிட்டனர். அதா வது அவர்கள் இந்தியர்கள் தான். ஆனால் இவர்கள் இந்திய குடி மக்கள் அல்ல; இவர்களால் நாட் டுக்கு ஆபத்து எனக் கூறி, குறிப் பிட்ட காலத்தில் 1,000க்கும் மேற் பட்ட வீடுகள் இடித்து தரைமட்ட மாக்கியுள்ளது குஜராத் பாஜக அரசு. இதே போல ஆதார் அட்டை கள், வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் அட்டை கள் வைத்திருந்த மேலும் 7,000 முஸ்லிம் குடும்பங்களின் வீடு களும் இடிக்கப்பட்டன. அவர்கள் வங்கதேசத்தினர் கிடையாது என்றும், இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் என செய்திகள் வெளி யாகியுள்ளன. துணை போன உயர்நீதிமன்றம் வீடு இடிப்பதற்கு முன் முஸ் லிம் மக்கள் குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இது தேசிய பாதுகாப்பு தொடர்பானது என குஜராத் பாஜக அரசு கூறியுள்ளது. அரசின் விளக் கத்தை மேற்கோள் காட்டி, குஜராத் உயர்நீதிமன்றம் முஸ்லிம் வீடு இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. நோட்டீஸ் இல்லை சியாசத் நகரில் வீடுகளை இழந்த முஸ்லிம் குடும்பங்கள், ”வீடுகளை இடிப்பதற்கு தங்க ளுக்கு எவ்வித நோட்டீஸும் வழங் கப்படவில்லை. அதே போன்று இடம்பெயர நேரமும் வழங்கப்பட வில்லை” என குற்றம்சாட்டியுள்ள னர். அதனால் இந்த புல்டோசர் நட வடிக்கை எதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ளது, எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புல்டோசர் நடவடிக்கைக்கு புதிய வியூகம் குற்றச்செயல்கள்
, வன்முறையில் தொடர்பு, ஆக்கிரமிப்பு எனக் கூறி பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு நிர்வாகத்தின் உத்தர வின் பேரில் முஸ்லிம் மக்களை துரத்த மற்றும் ஒடுக்க புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன. இந்த புல்டோசர் அடா வடிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் குஜராத் பாஜக அரசு புதிய வியூகத்தை கையாண்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிக வீடுகளை இடித்தால் தானே செய்தியாக செல்கிறது. அதனால் தற்போது குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து ஒவ்வொரு வாரம் ஒரு பகுதியில் முஸ்லிம் மக்களின் வீடுகளை இடித்து வருகிறது. இந்த வியூகத்தின் அடிப்படையில் தான் குஜராத் மாநிலத்தின் சியா சத் நகரில் குறிப்பிட்ட காலத்தில் 8,000 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.