states

ஆந்திராவில்  கோர விபத்து: 7 பேர் பலி

ஆந்திராவில்  கோர விபத்து: 7 பேர் பலி

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் பெரமனா கிராமம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அன்று அதிகாலை கார் - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் பயணித்த குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். கிராம மக்கள் அளித்த தகவ லின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்த வர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்வு பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தை ஏற் படுத்திய டிப்பர் லாரியின் ஓட்டுநரை கைது செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை முடிவில் மணல் ஏற்றிக் கொண்டு எதிர் திசையில் லாரி வந்தது என்று தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.