states

img

மேற்குவங்கத்தில் ஒவ்வொரு நாளும் 4 பேர் மரணம் கொல்கத்தா

மேற்குவங்கத்தில் ஒவ்வொரு நாளும் 4 பேர் மரணம் கொல்கத்தா

: வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்தால் (எஸ்ஐஆர்) மேற்கு வங்க மாநிலத்தில் நாள்தோறும் மூன்று முதல் நான்கு பேர் உயிரிழப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். வெள்ளியன்று கொல்கத்தாவின் ரெட் சாலையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழாவில் அவர் மேலும் கூறுகையில்,”எஸ்ஐஆர் அச்சம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை 110க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய சூழலில் நிலைமை மோசமாகியுள்ளது. எஸ்ஐஆர் அச்சம் காரணமாக ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளுக்கு தேர்தல் ஆணையமும், ஒன்றிய அரசுமே பொறுப்பேற்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.