பாஜக ஆளும் ஹரியானாவில் 360 கிலோ வெடிபொருட்கள்
ஹரியானாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முத லமைச்சராக நயாதீப் சைனி உள்ளார். இம்மாநிலத்தின் பரீதாபாத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில், மருத்துவ மாணவர்களின் லாக்கரில் வெடி பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. வெடிபொருள் இருப்பதாக தகவல் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிரா மாநில காவல்துறை யினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது 360 கிலோ அமோ னியம் நைட்ரேட் வெடிபொருட்கள் கிடைத்துள்ளன. கல்லூரிக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது தொடர்பான விசா ரணையை காவல் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். வெடிபொருட்களுடன் ஒரு ஏகே 47 ரக துப்பாக்கியும், 3 குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்த னர். மேலும் இந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் டாக்டர் உமர் முகமது என்பவரை தற் போது தேடி வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.