கேரளாவில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்
கேரள மாநிலத்தில் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஞாயி றன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், “திருவனந்தபுரம், கொல்லம், பத்த னம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப் புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்க ளுக்கு டிசம்பர் 9ஆம் தேதியும் திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண் ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி யும் தேர்தல் நடைபெறுகிறது. மேற்குறிப் பிட்ட 2 நாட்களிலும் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடை பெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை டிச.13 ஆம் தேதி நடைபெறும். நவம்பர் 21 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரி சீலனை நவ. 22 ஆம் தேதி நடைபெறும், நவ.24 வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். தேர்தல் நடத்தை விதிமுறை கள் திங்களன்று முதல் அமலுக்கு வந்தது” என மாநில தலைமை தேர்தல் அதி காரி ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.