மகாராஷ்டிராவில் ரயில் மோதி 3 இளைஞர்கள் பலி
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே கோபால்பாட்டியில் உள்ள தண்டவாளத்தில் ஞாயி றன்று இரவு, 6 இளைஞர்கள் நடந்து சென்றனர். இரவு 8.15 மணியளவில் புனே - டவுண்ட் டெமுரயில் இளைஞர்கள் மீது மோதியது. இதில் கலேபடலைச் சேர்ந்த பிரத மேஷ் நிதின் டிண்டே (18), கோபால் பாட்டியைச் சேர்ந்த தன்மய் மகேந்திர துபே (18), துஷார் ஷிண்டே (19) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். மற்ற 4 இளைஞர்கள் காய மின்றி உயிர் தப்பினர். தகவலறிந்த புனே நகரின் ஹடப்சர் ரயில்வே காவல்துறை யினர் 3 இளைஞர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஹடப்சர் காவல் நிலைய மூத்த ஆய்வாளர் சஞ்சய் மொகலே கூறுகையில்,”இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த இடம் இருட்டாக இருந்தது. இறந்த இளைஞர்கள் ஏன் ரயில் பாதையில் சென்றார்கள் என்பது குறித்து விசா ரிக்கப்பட்டு வருகிறது” என அவர் கூறினார்.
