states

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் மாவட்டத்தில் உள்ள ஞாயிறன்று பாதுகாப்புப் படையினருக்கும் - பாகிஸ்தானைச் தளமாகக் கொண்டு  இயங்கும் ஜைய்ஷ்-இ-முகமது  அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக் கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளி யாகி உள்ளன.  சத்ரூ பகுதியில் உள்ள பாசர்குட்டில் மேற்கொள்ளப்பட்ட ‘திராஷி-I’ நடவடிக்கையின் போது 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயு தங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்  பற்றப்பட்டன என இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.